கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் : 2 புதிய அணிகள் அறிவிப்பு + "||" + Ahmedabad and Lucknow to be the two new teams at Indian Premier League (IPL). CVC Capital Partners gets Ahmedabad while RPSG Group gets Lucknow.

ஐபிஎல் கிரிக்கெட் : 2 புதிய அணிகள் அறிவிப்பு

ஐபிஎல் கிரிக்கெட் : 2 புதிய அணிகள் அறிவிப்பு
அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தற்போது 8 அணிகள் விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுகின்றன. அடுத்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடும். ஐ.பி.எல். புதிய அணிகளுக்கான டெண்டர் நடைமுறையை கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. 

டெண்டர் விண்ணப்ப கட்டணமாக ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம் 22 நிறுவனங்கள் டெண்டர் விண்ணப்பங்களை வாங்கி இருந்தன. அணியின் அடிப்படை விலையாக ரூ.2 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டது. 

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அகமதாபாத், லக்னோ புதிய அணிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.  லக்சம்பர்க்கை தலைமையிடமாக கொண்ட சிவிசி நிறுவனம் அகமதாபாத் அணியை  ஏலத்தில் எடுத்துள்ளது. ஆர்பிஎஸ்ஜி  குழுமம் லக்னோ அணியை ஏலத்தில் எடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல் கிரிக்கெட்: அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட 3 வீரர்கள்..
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் எந்தெந்த அணிகளில் யார் யார் தக்கவைப்பு என்பது குறித்த பட்டியல் நேற்று வெளியானது.
2. ஐ.பி.எல் கிரிக்கெட் : டோனி, ஜடேஜா உள்பட 4 வீரர்களை தக்கவைத்தது சி.எஸ்.கே அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி ,ஜடேஜா, ருதுராஜ், மொயீன் அலி ஆகியோரை தக்கவைத்துள்ளது
3. ஐ.பி.எல் கிரிக்கெட் : ரோகித் சர்மா உட்பட 4 வீரர்களை தக்கவைத்தது மும்பை அணி
மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா ,பும்ரா ,பொல்லார்ட் ,சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தக்கவைத்துள்ளது
4. ஐ.பி.எல் கிரிக்கெட் :தக்கவைக்கப்பட்ட வீரர்கள் உத்தேச பட்டியல்...?
எந்த அணி யாரை தக்க வைத்து கொண்டது என்பது குறித்து இன்று இரவு 9.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்பட்டு உள்ளது.
5. ஐபிஎல் கோப்பை யாருக்கு? இறுதிப்போட்டியில் சென்னை- கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை
14-வது ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை உச்சிமுகரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.