இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்கு பராஸ் மாம்ப்ரே விண்ணப்பம்


இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்கு பராஸ் மாம்ப்ரே விண்ணப்பம்
x

இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்காக பராஸ் மாம்ப்ரே விண்ணப்பித்துள்ளார்.

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பதவி காலம் நடப்பு 20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது. பந்து வீச்சு பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர் உள்பட உதவி பயிற்சியாளர்களின் ஒப்பந்தமும் முடிவுக்கு வருகிறது. 

தலைமை பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர் பதவிக்கு தகுதி படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.  இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பராஸ் மாம்ப்ரே நேற்று பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருக்கிறார். 

மராட்டியத்தை சேர்ந்த 49 வயதான பராஸ் மாம்ப்ரே இந்திய அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார். பெங்கால் மற்றும் பரோடா அணியின் பயிற்சியாளராக இருந்துள்ள மாம்ப்ரே தற்போது இந்திய ‘ஏ’ மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கிறார். 

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் வர வாய்ப்பு இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story