கிரிக்கெட்

இந்திய வீரர் விராட் கோலிக்கு பாகிஸ்தான் பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் பாராட்டு + "||" + T20 World Cup 2021: Sana Mir, former captain of PAK women’s cricket team, praised Virat Kohli fiercely, said – India will return soon

இந்திய வீரர் விராட் கோலிக்கு பாகிஸ்தான் பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் பாராட்டு

இந்திய வீரர் விராட் கோலிக்கு பாகிஸ்தான் பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் பாராட்டு
இந்திய வீரர் விராட் கோலிக்கு பாகிஸ்தான் பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் பாராட்டு தெரிவித்தார்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை கட்டித்தழுவி இந்திய கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்தார். 

அவரது செயலை வெகுவாக பாராட்டியுள்ள பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் கூறுகையில், ‘தோல்வியை இந்திய கேப்டன் விராட் கோலி பரிவோடு, அருமையாக கையாண்டார். அவரது விளையாட்டு உணர்வை மதிக்கிறேன். அவர் நடந்து கொண்ட விதத்தை பார்க்க உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. 

இது போன்ற செயல்கள் மூலம் முன்னணி வீரர்கள் முன்மாதிரியாக திகழ்கிறார்கள். அடுத்த போட்டியில் இந்திய அணி சரிவில் இருந்து எழுச்சி பெற்றால் நான் ஆச்சரியப்படமாட்டேன். இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் ஒரு முறை மோதுவதை பார்க்க முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. பேட்டிங்கில் கவனம் செலுத்த பிற கேப்டன் பதவியையும் கைவிடலாம்: கோலிக்கு ரவி சாஸ்திரி யோசனை
விராட் கோலி தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த, பிற கேப்டன் பதவியையும் கைவிடலாம் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
2. களத்தில் என் தீவிரம் குறைந்தால் கிரிக்கெட்டையே விட்டு விடுவேன்- விராட் கோலி
கேப்டனாக இல்லாத போதும் ஆட்டம் எங்குப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை நான் பார்த்துக் கொண்டுதான் இருப்பேன்.
3. வலைதளங்களில் விமர்சனம்: விராட் கோலிக்கு ராகுல் காந்தி ஆதரவு
விராட் கோலிக்கு எதிராக வலைதளங்களில் விமர்சனம் எழுந்த நிலையில் அவருக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
4. டோனி ஆலோசகராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது : விராட் கோலி
இந்தியா அணி ஆலோசகராக முன்னாள் கேப்டனான டோனி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்
5. டோனியைப் போல ஒரு விக்கெட் கீப்பர் கிடைக்கவில்லை: ரிஷப் பண்டுடன் கோலி கலந்துரையாடல்
விராட் கோலியும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடும் விளம்பர வீடியோ ஒன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.