கிரிக்கெட்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு டிராவிட் விண்ணப்பம் + "||" + Rahul Dravid applies for job of India head coach on deadline day

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு டிராவிட் விண்ணப்பம்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு டிராவிட் விண்ணப்பம்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு டிராவிட் நேற்று முறைப்படி விண்ணப்பம் அனுப்பினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவி காலம் நடப்பு 20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர் பதவிகளுக்கு தகுதி படைத்தவர்கள் விண்ணபிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாகும். 

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனருமான ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நேற்று முறைப்படி விண்ணப்பம் அனுப்பினார். பவுலிங் பயிற்சியாளர் பதவிக்கு பராஸ் மாம்ப்ரேவும், பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு அபய் ஷர்மாவும் முன்னதாகவே விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் இருவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் டிராவிட்டுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

ஐ.பி.எல். போட்டியின் போது டிராவிட் அமீரகம் சென்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பெரிய வீரர்கள் யாரும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்காததால் டிராவிட் நிச்சயம் இந்த பதவியை பிடிப்பார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டிராவிட் தலைமை பயிற்சியாளராகும் பட்சத்தில் அவர் தற்போது வகிக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமி இயக்குனர் பதவி காலியாகும். அந்த இடத்துக்கு முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ்.லட்சுமண், அனில் கும்பிளே ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. புதிய வகை கொரோனா : இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா செல்வதில் சிக்கல்
தென் ஆப்பிரிக்காவில் புதுவகை உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
2. இந்திய அணி தற்போது யதார்த்தமாக இருக்க வேண்டும்: வெற்றிக்குப் பிறகு டிராவிட் பேட்டி..!
நாம் நமது கால்களை தரையில் வைத்து சற்று யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார்.
3. ஒட்டுமொத்த அணியின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தப்படும்: ரோகித், டிராவிட் பேட்டி..!
அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று ரோகித் மற்றும் டிராவிட் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
4. இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டி: கேன் வில்லியம்சன் விலகல்...!
இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளார்.
5. இந்திய அணிக்கு இது கடினமான நேரம்: சச்சின் டெண்டுல்கர்
இந்திய அணிக்கு இது கடினமான நேரம் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்