இங்கிலாந்து அணியுடன் மோதுவது எப்போதும் சவாலாக இருக்கும் :ஆரோன் பிஞ்ச்


இங்கிலாந்து அணியுடன் மோதுவது எப்போதும் சவாலாக இருக்கும் :ஆரோன் பிஞ்ச்
x
தினத்தந்தி 29 Oct 2021 10:55 AM GMT (Updated: 29 Oct 2021 10:55 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான போட்டி எப்போதும் சிறந்த சவாலாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

துபாய் 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று துபாயில் நடந்த ஆட்டத்தில் இலங்கையை ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது .

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி  20 ஓவரில் 6 விக்கெட் 154 ரன் எடுத்தது. அதிகபட்சமாக குஷால் பெரைரா, நிசாங்கா தலா 35 ரன்கள் எடுத்தனர் 

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 17 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்து வெற்றி பெற்றது.  ஆஸ்திரேலியா அணி சார்பில் டேவிட் வார்னர்  அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார் .

இந்த போட்டியில்  ஆடம் ஜாம்பா  4  ஓவர்கள்  வீசி 12 ரன் மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். 

போட்டிக்கு பின்னர்  ஆரோன் பிஞ்ச்  கூறியதாவது:-

இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டோம். ஆடம்  ஜாம்பா மற்றும் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக பந்து வீசினர். ஆடம் ஜாம்பாவுக்கு இன்றைய நாள் அற்புதமாக அமைந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டி  எப்போதும் சிறந்த சவாலாக இருக்கும். அடுத்து அந்த அணியுடன் மோதுவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர்  கூறினார்.

Next Story