கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்து ரஷித் கான் புதிய சாதனை! + "||" + T20 World Cup 2021: Rashid Khan Becomes Fastest Bowler to 100 T20I Wickets

20 ஓவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்து ரஷித் கான் புதிய சாதனை!

20 ஓவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்து ரஷித் கான் புதிய சாதனை!
20 ஓவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்து ரஷித் கான் புதிய சாதனை படைத்துள்ளார்.
துபாய்,

டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. 

இந்த போட்டியில் ரஷித் கான் பாகிஸ்தானின் முகமது ஹபீஸை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த சாதனையை அடைய அவருக்கு 54 இன்னிங்ஸ்கள் மட்டுமே தேவைப்பட்டன. சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் இதுவரை 4 வீரர்கள் மட்டுமே 100 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை அடைந்துள்ளனர்.  

இலங்கையின் லசித் மலிங்கா (76 இன்னிங்ஸ்), நியூசிலாந்தின் டிம் சவுதி (82 இன்னிங்ஸ்) மற்றும் பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹசன் (83 இன்னிங்ஸ்)ஆகியோருடன் தற்போது ரஷித் கானும் (54 இன்னிங்ஸ்) இணைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாரத்தானில் 1,000 கி.மீ. தூரம் ஓடி மா.சுப்பிரமணியன் சாதனை
மாரத்தானில் 1,000 கி.மீ. தூரம் ஓடி மா.சுப்பிரமணியன் சாதனை 100 நாட்கள் இலக்கை 92 நாட்களிலேயே எட்டினார்.
2. ஒருநாள் கிரிக்கெட்: சச்சின் சாதனையை முறியடித்த கோலி!
விராட் கோலி, இந்தியாவுக்கு வெளியே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைந்துள்ளார்.
3. டெல்லியில் அனைவருக்கும் முதல் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி சாதனை..!
டெல்லியில் அனைவருக்கும் முதல் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.
4. இரு இன்னிங்சிலும் சதம்: உஸ்மான் கவாஜா புதிய சாதனை!
ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 9-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
5. சென்னையில் கடந்த 10 மாதங்களில்: 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை கையாண்டு சாதனை
சென்னையில் கடந்த 10 மாதங்களில் 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை கையாண்டு சாதனை ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்.