இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 125 ரன்களுக்கு ஆல்-அவுட்


இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 125 ரன்களுக்கு ஆல்-அவுட்
x
தினத்தந்தி 30 Oct 2021 4:06 PM GMT (Updated: 30 Oct 2021 4:06 PM GMT)

டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 125 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

துபாய்,

டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்று வரும் 26-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டு வருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் பிஞ்ச் களமிறங்கினர்.  

ஆனால், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

சற்று நிலைத்து நின்று ஆடிய அந்த அணியின் கேப்டன் பிஞ்ச் 49 பந்துகளை எதிர்கொண்டு 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

Next Story