கிரிக்கெட்

இந்திய அணி குறித்து சோயப் மாலிக் பேச பாகிஸ்தான் அணி நிர்வாகம் தடை..? + "||" + T20 World Cup 2021: Pakistan team management stop Shoaib Malik from speaking about struggling Team India

இந்திய அணி குறித்து சோயப் மாலிக் பேச பாகிஸ்தான் அணி நிர்வாகம் தடை..?

இந்திய அணி குறித்து  சோயப் மாலிக் பேச பாகிஸ்தான் அணி நிர்வாகம் தடை..?
பாகிஸ்தான் ஊடக மேலாளர் இந்திய கிரிக்கெட் அணி குறித்து மாலிக்கிடம் எந்த கேள்வியும் கேட்க அனுமதி மறுத்துவிட்டார்.

அபுதாபி

20 ஓவர் உலக கோப்பை போட்டியில்  பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்து உள்ளது.  மறுபுறம் பாகிஸ்தான், தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, நாளை (நவம்பர் 2)  தனது அடுத்த ஆட்டத்தில் நமீபியாவை எதிர்கொள்ளத் தயாராகி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

நியூசிலாந்துடனான  இந்தியாவின் தோல்விக்குப் பிறகு, பெரும்பாலான பாகிஸ்தான் ஊடகங்கள், விராட் கோலி குறித்து  முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக்கின் எண்ணங்கள் குறித்து அறிய விரும்பின.

பாகிஸ்தான் ஊடக மேலாளர் இந்திய கிரிக்கெட் அணி குறித்து மாலிக்கிடம் எந்த கேள்வியும் கேட்க அனுமதி மறுத்துவிட்டார். உண்மையில், நிருபர்களின் இரண்டு கேள்விகளையும் அவர் தடுத்து விட்டார். இருப்பினும், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தைப் போன்ற ஒரு பெரிய ஆட்டத்தை வென்றது அணிக்கு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது என்று  மாலிக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி
20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.
2. 20 ஓவர் உலக கோப்பையை வெல்லப்போவது யார்? ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இன்று மோதல்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இன்றிரவு துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
3. 20 ஓவர் உலக கோப்பை: தென் ஆப்பிரிக்கா-வங்காளதேசம், பாகிஸ்தான்-நமிபியா அணிகள் இன்று மோதல்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா-வங்காளதேசம், பாகிஸ்தான்-நமிபியா அணிகள் மோதுகின்றன.
4. 20- ஓவர் உலக கோப்பை; இந்திய அணி அரையிறுதி செல்ல வாய்ப்பு உள்ளதா?
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்கும் பட்சத்தில் இந்தியாவின் அரையிறுதி கனவு முற்றிலும் தகர்ந்து போகும்.
5. இங்கிலாந்து அணியுடன் மோதுவது எப்போதும் சவாலாக இருக்கும் :ஆரோன் பிஞ்ச்
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி எப்போதும் சிறந்த சவாலாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.