கிரிக்கெட்

20- ஓவர் உலக கோப்பை; இந்திய அணி அரையிறுதி செல்ல வாய்ப்பு உள்ளதா? + "||" + T20 World Cup: In 7 points - How India can still qualify

20- ஓவர் உலக கோப்பை; இந்திய அணி அரையிறுதி செல்ல வாய்ப்பு உள்ளதா?

20- ஓவர் உலக கோப்பை; இந்திய அணி அரையிறுதி செல்ல வாய்ப்பு உள்ளதா?
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்கும் பட்சத்தில் இந்தியாவின் அரையிறுதி கனவு முற்றிலும் தகர்ந்து போகும்.

 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தனது இரு ஆட்டங்கள் முறையே பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் படுதோல்வியை இந்திய அணி சந்தித்தது. இதனால், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய மங்கி விட்டது என்றே சொல்லலாம்.  ஆனாலும், இந்திய அணி அரையிறுதி செல்லும் வாய்ப்பு முழுமையாக மறைந்துவிட்டது என்று சொல்ல முடியாது. 

குரூப்-2-பிரிவில் பாகிஸ்தான் அணி அரைஇறுதியை  ஏறத்தாழ இறுதி செய்து விட்டது.  மற்றொரு அரை இறுதி இடத்தை பிடிக்க மும்முனை போட்டி நிலவுகிறது.இந்திய அணியை பொறுத்தவரை இனி எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளை  மெகா வெற்றி பெற வேண்டும். ஆப்கானிஸ்தான் ரன்ரேட் தற்போது +3.097 ஆக உள்ளது. 

இந்திய அணி  ஆப்கானிஸ்தான்  அணியின் நெட் ரன் ரேட்டை குறைக்க வேண்டும். இல்லையென்றால் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

அதோடு,  ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். இவ்வாறு முடிவுகள் எல்லாம் சாதகமாக அமைந்தால் இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 3 வெற்றி, 2 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட்டில் முன்னிலை வகிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். மெகா வெற்றியை பெற்று நல்ல ரன் ரேட்டில் இந்தியா இருக்கும் பட்சத்தில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். 

மாறாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோற்கும் பட்சத்தில் இந்தியா, போட்டியில் இருந்து வெளியேறும். அதன்பிறகு நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ? அந்த அணி அரையிறுதியை எட்டும். 

தொடர்புடைய செய்திகள்

1. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் விழிப்படைய செய்தது - ராகுல் டிராவிட்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
2. இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: டி காக் அபார சதம்
130 பந்துகளில் 124 ரன்கள் அடித்த டிகாக் , பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
3. மாயமான அருணாச்சலப்பிரதேச சிறுவன் சீன ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்
காணாமல் போன சிறுவனை சீன ராணுவம் கண்டுபிடித்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
4. பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: இந்தியா- சீனதைபே அணிகள் இன்று மோதல்
இதில் இந்தியா வெற்றி பெற்றால் ஏறக்குறைய கால்இறுதியை உறுதி செய்து விடலாம்.
5. ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: உகாண்டாவை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி!
உகாண்டாவை 326 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.