கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை; பட்லர் அதிரடி சதம், இங்கிலாந்து 163 ரன்கள் குவிப்பு! + "||" + England scores 163 runs against Srilanka in T20 Worldcup.

டி20 உலகக்கோப்பை; பட்லர் அதிரடி சதம், இங்கிலாந்து 163 ரன்கள் குவிப்பு!

டி20 உலகக்கோப்பை; பட்லர் அதிரடி சதம், இங்கிலாந்து 163 ரன்கள் குவிப்பு!
டி20 உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 164 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஷார்ஜா,

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில்  இங்கிலாந்து - இலங்கை அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர்.

இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

ஜேசன் ராய் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நட்சத்திர பந்துவீச்சாளர் ஹசரங்காவின் பந்தில் பவுல்ட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மலன் 6 ரன்னிலும், பேர்ஸ்டோ ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஜாஸ் பட்லர் சதம் அடித்து அசத்தினார். அவர் 67 பந்துகளில் 6 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த கேப்டன் இயன் மோர்கன் 36 பந்துகளில் 3 சிக்சர்கள் 1 பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இலங்கை அணியின் ஹசரங்கா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 70 ஆண்டுகளாக லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாமல் கார் ஓட்டி டிமிக்கி கொடுத்த தாத்தா...!
லைசன்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் ஆவணங்கள் இல்லாமல் ஒரு நபர் 70 ஆண்டுகளுக்கு மேலாக கார் ஓட்டியுள்ளார்.
2. இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 96,871 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 96,871 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி..!
20 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
4. இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 1,02,292 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,02,292 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 94,326 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 94,326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.