கிரிக்கெட்

"மீண்டும் வருவேன் " அதிரடி அறிவிப்பை வெளியிட்ட யுவராஜ் சிங்...! + "||" + SHOCKING! Yuvraj Singh announces his comeback from retirement

"மீண்டும் வருவேன் " அதிரடி அறிவிப்பை வெளியிட்ட யுவராஜ் சிங்...!

"மீண்டும் வருவேன் " அதிரடி அறிவிப்பை வெளியிட்ட யுவராஜ் சிங்...!
40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒரு நாள் போட்டி மற்றும் 58 இருபது ஓவர் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள யுவராஜ் சிங் , ஒரு நாள் போட்டிகளில் 14 சதங்களை விளாசியுள்ளார்.
புதுடெல்லி 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங். சக வீரர்களாக செல்லமாக யுவி என அழைக்கப்படும் அவருக்கு இப்போது வயது 39. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதில் இருந்து முழுமையாகக் குணமடைந்து பின்னர் மீண்டும் அணியில் இணைந்தார். பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக் கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்றிருந்தார்.

இதுவரை 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒரு நாள் போட்டி மற்றும் 58  இருபது ஓவர்  போட்டிகளிலும்  பங்கேற்றுள்ள யுவராஜ் சிங் , ஒரு நாள் போட்டிகளில் 14 சதங்களை விளாசியுள்ளார். இந்நிலையில், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் மீண்டும் கிரிக்கெட் விளையாட இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ள அவர், ‘உங்கள் தலைவிதியை கடவுள் தான் தீர்மானிக்கிறார். ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி மாதம் கிரிக்கெட் களத்தில் மீண்டும் இறங்குவேன் என நம்புகிறேன். உங்கள் அன்பும் வாழ்த்துகளும் எனக்கு முக்கியம். தொடர்ந்து ஆதரவளியுங்கள். கடினமான நேரங்களில் ரசிகர்கள் எனக்கு ஆதரவளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் இந்திய அணிக்காக ஆட இருக்கிறாரா, 20 ஓவர் தொடரில் ஆட இருக்கிறாரா என்பது பற்றி எதையும் தெரிவிக்கவில்லை. அவர் கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார் என்பதை அறிந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்புடைய செய்திகள்

1. குல்தீப் யாதவை பாராட்டியது அஸ்வினைக் காயப்படுத்தியிருந்தால் மகிழ்ச்சிதான்- ரவிசாஸ்திரி
இந்தியாவின் நம்பர் 1 ஸ்பின்னர் குல்தீப் யாதவ் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சொன்னது தன் இதயத்தைநொறுங்கச் செய்தது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதற்கு ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார்.
2. "பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து" சவுரவ் கங்குலி மீது விமர்சனம்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி பேசிய விஷயம் ஒன்று இப்போது சர்ச்சையாகியுள்ளது.
3. டோனி-யுவராஜ் திடீர் சந்திப்பு..! திக்குமுக்காடிப் போன ரசிகர்கள்..!
யுவராஜ் சிங் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், டோனியுடன் யுவராஜ் சிங் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறார்.
4. டோனி மீது அப்படி என்ன கோபம்...!கம்பீர் இப்படி சொல்லிட்டாரே...?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் டோனியின் பெயரை கம்பீர் குறிப்பிடவில்லை.
5. பாகிஸ்தானின் புதிய ஹீரோவான முகமது ரிஸ்வான்....! எப்படி...?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்துக்கு 2 நாட்கள் முன்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் முகமது ரிஸ்வான்.