கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு + "||" + T20 worldcup, SouthAfrica win toss against Bangladesh

டி20 உலகக்கோப்பை: வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

டி20 உலகக்கோப்பை: வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அபு தாபி,

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று அபுதாபியில் நடைபெற உள்ள 30-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்காளதேச அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

தெம்பா பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி ‘சூப்பர்-12’ சுற்றின் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. அதன் பிறகு அடுத்த இரண்டு ஆட்டங்களில் வெஸ்ட்இண்டீஸ், இலங்கையை அடுத்தடுத்து வீழ்த்தி கம்பீரம் காட்டியது.

மகமுதுல்லா தலைமையிலான வங்காளதேச அணி இலங்கை, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய அணிகளிடம் தொடர்ச்சியாக தோல்வியை தழுவி அரைஇறுதி வாய்ப்பை இழந்து கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மட்டுமின்றி பீல்டிங்கிலும் சொதப்பி வருகிறது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் விலகி இருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும். எல்லா துறையிலும் எழுச்சி பெற்றால் மட்டுமே வங்காளதேச அணியால் வலுவான தென்ஆப்பிரிக்க அணிக்கு ஈடுகொடுக்க முடியும்.

இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச 20 ஓவர் போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 6 முறையும் தென்ஆப்பிரிக்க அணியே வென்று இருக்கிறது. இன்றைய ஆட்டத்திலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அரைஇறுதி வாய்ப்பை வலுப்படுத்த தென்ஆப்பிரிக்க அணி தீவிரம் காட்டும். 

இரு அணி வீரர்கள் விவரம்,

தென் ஆப்பிரிக்கா:- பவுமா(கேப்டன்), டி காக், ஹென்றிக்ஸ், வான் டெர் டுசன், மார்க்ரம், மில்லர், ப்ரெடோரியஸ், ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, ஷம்ஸி, கேஷவ் மஹராஜ்.

வங்காளதேசம்:- மகமதுல்லா(கேப்டன்), நைம், லிட்டன் தாஸ், சவுமியா சர்கார், முஷ்பிகுர் ரஹிம், அபிப் ஹொசைன், ஷமிம் ஹொசைன்,மெஹதி ஹசன்,நசும் அகமது,ஷரிபுல் இஸ்லாம், டஸ்கின் அகமது.

தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து அணி அபார வெற்றி
இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் வாங்காளதேசத்தை புரட்டி எடுத்தது.
2. வங்காளதேசத்துக்கு எதிரான 2-ஆம் டெஸ்ட்: வெற்றி வாய்ப்பில் நியூசிலாந்து அணி
3-ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை வங்காளதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.
3. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 126 ரன்களில் சுருண்ட வங்காளதேச அணி
முதல் இன்னிங்சில் வங்காளதேச அணி 126 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
4. வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 521 ரன்கள் குவித்து டிக்ளேர்
நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் 252 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
5. வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: இரட்டை சதத்தை நோக்கி டாம் லாதம்
முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்துள்ளது.