கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை; தென் ஆப்பிரிக்கா அபார பந்துவீச்சு, 84 ரன்களில் சுருண்டது வங்காளதேசம் + "||" + Bangladesh scores 84 runs against South africa in T20 Worldcup.

டி20 உலகக்கோப்பை; தென் ஆப்பிரிக்கா அபார பந்துவீச்சு, 84 ரன்களில் சுருண்டது வங்காளதேசம்

டி20 உலகக்கோப்பை; தென் ஆப்பிரிக்கா அபார பந்துவீச்சு, 84 ரன்களில் சுருண்டது  வங்காளதேசம்
வங்காளதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 85 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அபு தாபி,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. அபுதாபியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-வங்காளதேச அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, வங்காளதேச அணியின் தொடக்க வீரர்களாக முகமது நைம் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். நைம் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய சவுமியா சர்கார் மற்றும் முஷ்பிகுர் ரஹிம் ஆகிய இருவரும் அடுத்தடுத்து டக்-அவுட் ஆகி வெளியேறினர்.

மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிட்டன் தாஸ் 36 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய வீரர்கள், தென் ஆப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல்  சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். எனினும், சற்று நிலைத்து நின்று ஆடிய மெஹதி ஹசன் 25 பந்துகளில் 1 சிக்சர் 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்தார். 

இறுதியில், 18.2 ஓவர்கள் முடிவில்  வங்காளதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 84 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரபாடா மற்றும் அன்ரிச் நார்ட்ஜே தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஷம்சி 2 விக்கெட்டுகளையும், ப்ரெடோரியஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து, 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. டி20 உலகக்கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு: இந்தியா முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதல்...!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.
2. வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து அணி அபார வெற்றி
இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் வாங்காளதேசத்தை புரட்டி எடுத்தது.
3. வங்காளதேசத்துக்கு எதிரான 2-ஆம் டெஸ்ட்: வெற்றி வாய்ப்பில் நியூசிலாந்து அணி
3-ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை வங்காளதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.
4. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 126 ரன்களில் சுருண்ட வங்காளதேச அணி
முதல் இன்னிங்சில் வங்காளதேச அணி 126 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
5. வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 521 ரன்கள் குவித்து டிக்ளேர்
நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் 252 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.