கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி + "||" + T20 World Cup: New Zealand win by 8 wickets

டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

டி20 உலகக்கோப்பை:  நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
அபுதாபி, 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர்-12’ சுற்றின் இன்றைய  ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை  தேர்வு செய்தது. அந்த அணியில் பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து அணியில் அபாரமான பந்துவீச்சில் அடுத்தடுத்து வெளியேறினர். நஜீபுல்லாவின் 73 ரன்கள் உதவியுடன் அந்த அணி 124 ரன்கள் எடுத்தது.

பின்னர் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி வில்லியம்சன் மற்றும் கான்வேயின் பொறுப்பான ஆட்டத்தால், 18.1 ஓவர்களில் இலக்கை எளிதில் எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு போட்டியின்றி முன்னேறியது. 

நியூசிலாந்து அணியின் வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை முற்றிலுமாக இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்: இந்தியாவின் சாதனைகள்...!
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த வெற்றியின் மூலம் சில சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன.
2. மும்பை டெஸ்ட்; நியூசிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
3. மும்பை டெஸ்ட்டில் நியூசிலாந்து திணறல்; இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்
3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.
4. மும்பை டெஸ்ட்: காயம் காரணமாக 2 வீரர்கள் பீல்டிங் செய்யவில்லை - பிசிசிஐ தகவல்
காயம் காரணமாக மயங்க் அகர்வால், சுப்மான் கில் ஆகியோர் இன்று பீல்டிங் செய்யமாட்டார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
5. மும்பை டெஸ்ட் - மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி அபார ஆட்டம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 405 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து விளையாடி வருகிறது.