கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்கு + "||" + Namibia set a target of 133 for India in the T20 World Cup.

டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்கு

டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்கு
டி20 உலகக்கோப்பை நமிபிய அணி இந்திய அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
துபாய்,

டி 20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா- நமிபியா அணிகள் மோதின. இந்த போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி நமிபிய அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்டீபன் பார்ட் 21 ரன்கள் எடுத்தார். டேவிட் வைஸ் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுக்க மற்ற பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் வெளியேறினர். இறுதியில் நமிபிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. 

இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜாவும், ரவிச்சந்திரன் அஸ்வினும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் உலகக்கோப்பை : அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் பாபர் அசாம் முதலிடம்
இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் அதிகபட்ச தனிநபர் ரன்களை இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் அடித்துள்ளார்
2. டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு
பாகிஸ்தான் அணி ஸ்காட்லாந்துக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
3. டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு
டி20 உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
4. டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5. டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து அணிக்கு 125 ரன்கள் வெற்றி இலக்கு
டி20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.