கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் : இந்திய அணி அறிவிப்பு + "||" + India squad for T20Is against New Zealand is announced by BCCI

நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் : இந்திய அணி அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் : இந்திய அணி அறிவிப்பு
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வரும் 17 ஆம் தேதி ஜெய்ப்பூரில் தொடங்குகிறது.
டெல்லி 

நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதி உடன் 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் முடிவடைய உள்ள நிலையில் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று  20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்தியா - நியூசிலாந்து  அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வரும் 17 ஆம் தேதி ஜெய்ப்பூரில் தொடங்குகிறது. இரண்டாவது 20 ஓவர் போட்டி 19 ஆம் தேதி ராஞ்சியிலும் கடைசி மற்றும் இறுதி போட்டி 21 ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இதில் ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஷ்வின், அக்சர் படேல் , அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது. சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா ஏற்றுமதிக்கு விதித்த தடை எதிரொலி: உலக அளவில் உச்சம் தொட்டது கோதுமை விலை
இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, உலக அளவில் கோதுமை விலை உச்சம் தொட்டுள்ளது.
2. இந்தியா-ஜாம்பியா இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி ரத்து
அணியில் போதுமான வீரர்கள் தயாராக இல்லாததால் இந்த போட்டியில் விளையாட முடியாத நிலையில் இருப்பதாக ஜாம்பியா கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
3. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்காக வருவோருக்கு சிறப்பு தளம் - சுகாதாரத்துறை மந்திரி தகவல்
இந்தியாவை உலகளாவிய மருத்துவ மதிப்பு மையமாக மாற்ற உறுதி பூண்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
4. இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புகிறதா? இந்திய தூதரகம் விளக்கம்
அசாதாரண சூழல் நிலவும் இலங்கைக்கு பாதுகாப்பு படைகள் எதுவும் அனுப்பும் திட்டம் இல்லை என்று இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
5. “இந்தியா நம்பர்-1 நாடாக மாற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் செயல்படுகிறார்” - கவர்னர் ஆர்.என்.ரவி
உலகின் நம்பர்-1 நாடாக இந்தியா மாற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.