கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: அரை-இறுதியில் நியூசிலாந்து முதலில் பந்துவீச்சு தேர்வு! + "||" + T20 Worldcup; Newzealand won the toss and elect to field first.

டி20 உலகக்கோப்பை: அரை-இறுதியில் நியூசிலாந்து முதலில் பந்துவீச்சு தேர்வு!

டி20 உலகக்கோப்பை: அரை-இறுதியில் நியூசிலாந்து முதலில் பந்துவீச்சு தேர்வு!
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதி போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அபுதாபி,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ‘சூப்பர்-12’ சுற்று முடிவில் ‘குரூப்-1’-ல் முதல் 2 இடங்களை பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ‘குரூப்-2’-ல் முதல் இரு இடங்களை தனதாக்கிய பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதி போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணி ‘சூப்பர்-12’ சுற்று லீக் ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம், ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளை அடுத்தடுத்து பந்தாடியது. அந்த அணியில் காயம் காரணமாக ஜாசன் ராய் போட்டி தொடரில் இருந்து விலகினார். அவர் விளையாட முடியாதது இங்கிலாந்து அணிக்கு பெருத்த பின்னடைவாகும். அவருக்கு மாற்று வீரராக ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் ஜோஸ் பட்லர் (5 ஆட்டங்களில் ஒரு சதம் உள்பட 240 ரன்கள்), டேவிட் மலான், லிவிங்ஸ்டன், பேர்ஸ்டோ ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆல்-ரவுண்டராக மொயீன் அலி அசத்துகிறார்.

நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் பணிந்தது. அடுத்த ஆட்டங்களில் இந்தியா, ஸ்காட்லாந்து, நமிபியா, ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. அந்த அணியின் பேட்டிங்கில் மார்ட்டின் கப்தில், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டிவான் கான்வே ஆகியோர் ஜொலித்து வருகிறார்கள். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, சோதி, மிட்செல் சான்ட்னெர் ஆகியோர் மிரட்டுகிறார்கள்.

2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவர் முடிவில் ‘டை’யில் முடிந்த போட்டியில் பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. அதற்கு பதிலடி கொடுத்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்க நியூசிலாந்து அணி தீவிரம் காட்டும். சம பலம் வாய்ந்த இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த அரையிறுதி ஆட்டம் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்களின் பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: இயன் மோர்கன் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயீன் அலி, டேவிட் மலான், சாம் பில்லிங்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், மார்க் வுட்.

நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல்,  டிவான் கான்வே, கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், ஆடம் மில்னே, டிம் சவுதி, சோதி, டிரென்ட் பவுல்ட்.


தொடர்புடைய செய்திகள்

1. டி20 உலகக்கோப்பை அரை-இறுதிப் போட்டி; இங்கிலாந்து 166 ரன்கள் குவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை-இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி 166 ரன்கள் எடுத்துள்ளது.
2. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
3. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
4. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்-12 சுற்று இன்று தொடக்கம்
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்டில் இன்று தொடங்கும் சூப்பர்-12 சுற்றில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
5. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு
16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை நடக்கிறது.