கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை அரை-இறுதிப் போட்டி; இங்கிலாந்து 166 ரன்கள் குவிப்பு! + "||" + England scores 166 runs against Newzealand.

டி20 உலகக்கோப்பை அரை-இறுதிப் போட்டி; இங்கிலாந்து 166 ரன்கள் குவிப்பு!

டி20 உலகக்கோப்பை அரை-இறுதிப் போட்டி; இங்கிலாந்து 166 ரன்கள் குவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை-இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி 166 ரன்கள் எடுத்துள்ளது.

அபுதாபி,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் முதலாவது அரைஇறுதி போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கவீரர் பேர்ஸ்டோ 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆடம் மில்னே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால், பவர்-பிளே முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்தது. எனினும்,தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பட்லர் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அவரை தொடர்ந்து களமிறங்கிய மலான் மற்றும் மொயின் அலி ஜோடி சிறப்பாக விளையாடியது.மலான் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த லிவிங்ஸ்டன் 10 பந்துகளில் 1 சிக்சர் 1 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்தார்.

மொயின் அலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 2 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார். 

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் ஆடம் மில்னே, டிம் சவுதி, சோதி மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

தொடர்ந்து 167 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம்  என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

1. டி20 உலகக்கோப்பை: அரை-இறுதியில் நியூசிலாந்து முதலில் பந்துவீச்சு தேர்வு!
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதி போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
2. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
3. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
4. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்-12 சுற்று இன்று தொடக்கம்
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்டில் இன்று தொடங்கும் சூப்பர்-12 சுற்றில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
5. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு
16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை நடக்கிறது.