10 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கலாம்: டூ பிளஸ்சிஸ் யோசனை!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Nov 2021 9:52 AM GMT (Updated: 11 Nov 2021 9:52 AM GMT)

10 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கலாம் என பாப் டூ பிளஸ்சிஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில்10 ஓவர்கள் கொண்ட  கிரிக்கெட் போட்டியானது வருகிற 19-ந் தேதி தொடங்கி டிசம்பர் 4-ந் தேதி வரை நடக்க இருக்கிறது. 

இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் முதல்முறையாக பங்கேற்க உள்ளார். இவர் இந்த போட்டி குறித்து காணொலியின் வாயிலாக அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது,

‘நான் 3 வடிவிலான போட்டிகளிலும் நீண்ட காலமாக விளையாடி இருக்கிறேன். தற்போது 10 ஓவர் போட்டி என்னை மிகவும் கவர்ந்து இருக்கிறது. என்னை போன்ற வீரர்கள் இதுபோன்ற போட்டிகளில் விளையாட ஆர்வமாக இருக்கிறார்கள்.  விரைவில் முடிவுகள் கண்டறியப்படும் 10 ஓவர் போட்டிகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இந்த வடிவிலான போட்டியை ஒலிம்பிக்கில் பயன்படுத்த முடியும். விறுவிறுப்பு நிறைந்த இந்த போட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது’ என்று  டூ பிளஸ்சிஸ் கூறினார்.


Next Story