கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை அரை-இறுதிப் போட்டி; பாகிஸ்தான் 176 ரன்கள் குவிப்பு! + "||" + T20 World cup, Australia need 177 runs to win

டி20 உலகக்கோப்பை அரை-இறுதிப் போட்டி; பாகிஸ்தான் 176 ரன்கள் குவிப்பு!

டி20 உலகக்கோப்பை அரை-இறுதிப் போட்டி; பாகிஸ்தான் 176 ரன்கள் குவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரை-இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி 176 ரன்கள் எடுத்துள்ளது.
துபாய்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது அரைஇறுதி போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசம் ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கவீரர் பாபர் ஆசம் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில்  ஆட்டமிழந்தார். எனினும்,தொடர்ந்து சிறப்பாக விளையாடிய முகமது ரிஸ்வான் 52 பந்துகளை சந்தித்து  4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து களமிறங்கிய பகர் சமன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்தார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்தார். 

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 2  விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம்  என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. டோங்காவுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஆஸ்திரேலியா
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பேரழிவை சந்தித்த டோங்கா நாட்டுக்கு ஆஸ்திரேலியா நிவாரண பொருட்கள் வழங்கியது.
2. டி20 உலகக்கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு: இந்தியா முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதல்...!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.
3. ஜோகோவிச் விசா ரத்து விவகாரம்: ஆஸ்திரேலிய நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
ஆஸ்திரேலிய நீதிமன்றம். தீர்ப்பு வெளியான அடுத்த 30 நிமிடங்களில் தடுப்புக் காவல் மையத்திலிருந்து ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
5. அடிலெய்ட் டென்னிஸ்: 100ம் நிலை வீராங்கனையிடம் தோல்வியடைந்த முன்னணி வீராங்கனை!
உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனையான சபலென்கா 100-வது இடத்தில் இருக்கும் வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.