உலகக்கோப்பை முடிந்த 2 நாட்களில் அடுத்த போட்டி : ஓய்வின்றி களம்காணும் நியூசிலாந்து


உலகக்கோப்பை முடிந்த 2 நாட்களில் அடுத்த போட்டி : ஓய்வின்றி களம்காணும் நியூசிலாந்து
x
தினத்தந்தி 12 Nov 2021 9:43 AM GMT (Updated: 2021-11-12T15:13:15+05:30)

14 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி அதன் பிறகு 17 ஆம் தேதி இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் போட்டியில் பங்கேற்கிறது.

துபாய் 

20 ஓவர் உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் நாளை மறுநாள் துபாயில் நடைபெறுகிறது. முதல் அரைஇறுதி போட்டியில் வெற்றி பெற்ற  நியூசிலாந்து  அணியும் இரண்டாவது அரைஇறுதி போட்டியில் நேற்று  வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சை  நடத்துகின்றன.

14 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி அதன் பிறகு 17 ஆம் தேதி இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் போட்டியில் பங்கேற்கிறது. உலக கோப்பை  லீக் சுற்று போட்டியுடன் வெளியேறிய இந்திய அணி ஜெய்ப்பூரில் நடைபெறும் முதல் 20 ஓவர் போட்டிக்கு தயாராக காலஅவகாசம் இருக்கும் நிலையில் நியூசிலாந்து அணிக்கு 2 நாள் மட்டுமே அவகாசம் உள்ளது.

அந்த 2 நாள் கால அவகாசத்திலும்  ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நியூசிலாந்து அணி இந்திய வரவிருக்கிறது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று காரணமாக வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்துதல் விதிகளை பின்பற்றி வரும் நிலையில் நியூசிலாந்து அணியினர் இந்த நெருக்கடியையும் எதிர்கொள்ள இருக்கின்றனர்.


Next Story