கிரிக்கெட்

அரை இறுதியில் தோற்றதால் எத்தகைய வேதனையில் இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும் - இம்ரான் கான் + "||" + I know what a pain it will be to lose in the semi - final - Imran Khan

அரை இறுதியில் தோற்றதால் எத்தகைய வேதனையில் இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும் - இம்ரான் கான்

அரை இறுதியில் தோற்றதால் எத்தகைய வேதனையில் இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும்  - இம்ரான் கான்
பாகிஸ்தான் அணியினர் அரை இறுதியில் தோற்றதால் எத்தகைய வேதனையில் இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. 

இந்த நிலையில் அணியின் தோல்வி குறித்து பாகிஸ்தான் நாட்டின் பிரதமரும், முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் டுவிட்டர் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர், ‘பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியினருக்கு: அரை இறுதியில் தோற்றதால் எத்தகைய வேதனையில் இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும். ஏனெனில் நானும் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் இது போன்ற ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறேன். 

ஆனால் நீங்கள் தரமான கிரிக்கெட் ஆடியதை நினைத்தும், வெற்றிகளின் போது தன்னடக்கமாக நடந்து கொண்ட விதத்தை எண்ணியும் நீங்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சார்க் மாநாடு விவகாரம்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவு விரிசலால் சார்க் மாநாடு நடத்தப்படவில்லை.
2. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர் சுட்டுக்கொலை
எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரரின் உடலை எடுத்துச்செல்லுமாறு அந்நாட்டை வலியுறுத்தியுள்ளோம் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
3. இந்தியா, பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிறுவனங்களின் பட்டியல் பரிமாற்றம்
இந்தியா, பாகிஸ்தான் இடையே 1988-ம் ஆண்டு, டிசம்பர் 31-ந் தேதி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
4. 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்: இந்தியாவை வென்றது பாகிஸ்தான்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின் விறுவிறுப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வென்றது.
5. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றி
இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது.