கிரிக்கெட்

மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் :ஸ்மிரிதி மந்தனா அதிரடியால் சிட்னி தண்டர்ஸ் வெற்றி + "||" + WBBL: Smriti Mandhana stars in Sydney Thunder s win

மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் :ஸ்மிரிதி மந்தனா அதிரடியால் சிட்னி தண்டர்ஸ் வெற்றி

மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் :ஸ்மிரிதி மந்தனா அதிரடியால் சிட்னி தண்டர்ஸ் வெற்றி
46 வது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிட்னி தண்டர்ஸ் அணி வெற்றி பெற்றது
ஆஸ்திரேலியா 

மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற 46 வது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிட்னி தண்டர்ஸ்  அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான மகளிர் பிக்பாஷ் லீக் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்மென் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

இன்று காலை நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 94 ரன்கள் குவித்தது.அந்த அணியின் தரப்பில் எல்லிஸ் பெர்ரி 40 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார்.95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சிட்னி தண்டர்ஸ் அணி.

 சிட்னி தண்டர்ஸ்  அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய நட்சத்திர இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 39 பந்துகளில் 45 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் கைப்பற்றிய  சிட்னி தண்டர்ஸ்  அணியின் இசி வோங் ஆட்டநாயகி விருது  பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆமதாபாத், லக்னோ அணியில் இடம் பெறும் வீரர்கள் யார்-யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆமதாபாத், லக்னோ அணிகள் தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ள 3 வீரர்கள் விவரத்தை நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
2. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு - கோலி விலகல்
தென் ஆப்ப்ரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
3. 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்: இந்தியாவை வென்றது பாகிஸ்தான்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின் விறுவிறுப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வென்றது.
4. இந்தியாவின் வெற்றியை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் -தென்னாப்பிரிக்க கேப்டன்
இந்தியாவின் வெற்றியை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தென்னாப்பிரிக்க அணி மேற்கொள்ளும் என அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் கூறியுள்ளார்.
5. விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
38 அணிகள் பங்கேற்கும் விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது.