கிரிக்கெட்

முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி + "||" + 20 Over World Cup: Australia wins the T20 World Cup for the first time

முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி

முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி
20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.
துபாய், 

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்–கெட்–டில் மகு–டம் யாருக்கு என்–பதை நிர்–ண–யிக்–கும் இறு–திப்–போட்–டி–யில் ஆஸ்–தி–ரே–லியா-நியூ–சி–லாந்து அணி–கள் நேற்–றி–ரவு துபா–யில் மோதின. நியூ–சி–லாந்து அணி–யில் காயத்–தால் ஒதுங்–கிய விக்–கெட் கீப்–பர் டிவான் கான்–வே–வுக்கு பதி–லாக டிம் செய்–பெர்ட் இடம் பிடித்–தார். ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்–தி–ரே–லிய கேப்–டன் ஆரோன் பிஞ்ச் தயக்–க–மின்றி முத–லில் பந்து வீச்சை தேர்வு செய்–தார். தாங்–களும் முத–லில் பவு–லிங்–கையே விரும்–பி–ய–தாக நியூ–சி–லாந்து கேப்–டன் கேன் வில்–லி–யம்–சன் கூறி–னார்.

இதை–ய–டுத்து டேரில் மிட்–செ–லும், மார்ட்–டின் கப்–தி–லும் நியூ–சி–லாந்து அணி–யின் தொடக்க ஆட்–டக்–கா–ரர்–க–ளாக களம் புகுந்–த–னர். முதல் மூன்று ஓவர்–களில் 2 பவுண்–டரி, ஒரு சிக்–சர் என்று உற்–சா–கத்–து–டன் ஆரம்–பித்த தொடக்க ஜோடி–யின் அஸ்–தி–வா–ரம் 4-வது ஓவ–ரில் சீர்–கு–லைந்–தது. டேரில் மிட்–செல் (11 ரன்) ஹேசில்–வுட்–டின் பந்து வீச்–சில் விக்–கெட் கீப்–பர் மேத்யூ வேட்–டி–டம் பிடி–பட்–டார்.

வில்–லி–யம்–சன் கலக்–கல்

2-வது விக்–கெட்–டுக்கு வந்த கேப்–டன் கேன் வில்–லி–யம்–சன், மார்ட்–டின் கப்–தி–லு–டன் இணைந்–தார். இரு–வ–ரும் நிதா–னத்தை கடை–பி–டித்–த–தால் ஸ்கோர் மந்–த–மா–கவே நகர்ந்–தது.

முதல் 10 ஓவர்–களில் ஒரு விக்–கெட்–டுக்கு 57 ரன்–கள் எடுத்–தி–ருந்–த–னர். நடப்பு தொட–ரில் முதல் 10 ஓவர்–களில் நியூ–சி–லாந்–தின் குறைந்த ஸ்கோர் இது தான். ஆட்–டத்–தின் 11-வது ஓவ–ரில் வேகப்–பந்து வீச்–சா–ளர் மிட்–செல் ஸ்டார்க் பந்–து–வீச்–சில் வில்–லி–யம்–சன் ‘ஹாட்–ரிக்’ பவுண்–டரி விரட்–டி–னார். இதில் ஒரு பந்தை எல்–லைக்–கோடு அருகே ஹேசில்–வுட் எளி–தாக கேட்ச் செய்–தி–ருக்க வேண்–டி–யது. பந்து அவ–ரது கையில் விழுந்து சிக்–கா–மல் எல்–லைக்–கோட்–டுக்கு ஓடி–யது.

மறு–மு–னை–யில் தடு–மாற்–றத்–து–டன் ஆடி வந்த கப்–தில் (28 ரன், 35 பந்து, 3 பவுண்–டரி) ஆடம் ஜம்–பா–வின் சுழற்–பந்தை முட்–டிப்–போட்டு தூக்–கிய போது கேட்ச் ஆகிப்–போ–னார். இருப்–பி–னும் ரன்–ரேட்டை உயர்த்த வேண்–டிய நெருக்–க–டிக்கு தள்–ளப்–பட்ட வில்–லி–யம்–சன் அதில் கவ–னம் செலுத்–தி–னார். மேக்ஸ்–வெல்–லின் ஓவ–ரில் அடுத்–த–டுத்து இரண்டு சிக்–சர் பறக்க விட்–ட–து–டன் 32 பந்–து–களில் தனது 14-வது அரை சதத்தை பூர்த்தி செய்–தார். 13.5 ஓவர்–களில் அந்த அணி 100 ரன்–களை தொட்–டது.

கேப்–ட–னுக்கே உரிய தனித்து–வத்–து–டன் பிர–மா–த–மாக ஆடிய வில்–லி–யம்–சன், வேகப்–பந்து வீச்–சா–ளர் மிட்–செல் ஸ்டார்க்கை விழி–பி–துங்க வைத்–தார். அவ–ரது மற்–றொரு ஓவ–ரில் 4 பவுண்–டரி, ஒரு சிக்–சர் தெறிக்க விட்டு ரசி–கர்–களை குஷிப்–ப–டுத்–தி–னார். ஸ்டம்பை குறி வைத்து யார்க்–க–ராக போட முயற்–சித்த ஸ்டார்க்–கின் வியூ–கம் வில்–லி–யம்–ச–னி–டம் எடு–ப–ட–வில்லை. இத–னால் நியூ–சி–லாந்தின் ஸ்கோ–ர் மள–ம–ள–வென எகி–றி–யது.

173 ரன்–கள் இலக்கு

அபா–ர–மாக ஆடிய வில்–லியம்–சன் 85 ரன்–களில் (48 பந்து, 10 பவுண்–டரி, 3 சிக்–சர்) பந்தை தூக்–கி–ய–டித்து கேட்ச் ஆனார். முன்–ன–தாக கிளைன் பிலிப்ஸ் 18 ரன்–களில் வெளி–யே–றி–னார். நிர்–ண–யிக்–கப்–பட்ட 20 ஓவர்–களில் நியூ–சி–லாந்து அணி 4 விக்–கெட்–டுக்கு 172 ரன்–கள் சேர்த்–தது. ஜேம்ஸ் நீஷம் 13 ரன்–க–ளு–ட–னும், டிம் செய்–பெர்ட் 8 ரன்–னு–ட–னும் களத்–தில் இருந்–த–னர். 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்–டத்–தில் ஓர் அணி–யின் அதி–க–பட்ச ஸ்கோர் இது–வா–கும்.

ஆஸ்–தி–ரே–லிய தரப்–பில் சிக்–க–ன–மாக பந்து வீசிய ஹேசில்–வுட் 4 ஓவர்–களில் 16 ரன்–கள் மட்–டுமே கொடுத்து 3 விக்–கெட் கைப்–பற்–றி–னார். ஆனால் மிட்–செல் ஸ்டார்க் 4 ஓவர்–களில் 60 ரன்–களை வாரி வழங்கி வள்–ள–லாக மாறி–னார். அவ–ரது சொதப்–பல் பந்து வீச்சு இது–வா–கும். அத்–து–டன் இறு–திப்–போட்–டி–யில் அதிக ரன்–களை விட்–டுக்–கொ–டுத்–த–வர் என்ற மோச–மான சாத–னை–யும் அவர் வசம் ஒட்–டிக் கொண்–டது.

வார்–னர்-மார்ஷ்

அடுத்து 173 ரன்–கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்–தி–ரே–லிய அணி–யில் கேப்–டன் ஆரோன் பிஞ்ச் (5 ரன்) தாக்–குப்–பி–டிக்–க–வில்லை. இதன் பின்–னர் டேவிட் வார்–ன–ரும், மிட்–செல் மார்–சும் கூட்–டணி போட்டு அணியை சரி–வில் இருந்து மீட்–ட–து–டன் வெற்–றிப்–பா–தைக்கு அடித்–த–ள–மிட்–ட–னர். ஏது–வான பந்–து–களை மட்–டும் பதம் பார்த்த இவர்–கள் சாதுர்–ய–மாக விளை–யாடி ஸ்கோரை நகர்த்–தி–னர். 

இந்த உலக கோப்–பை–யில் 3-வது முறை–யாக அரை–ச–தம் அடித்த வார்–னர் (53 ரன், 38 பந்து, 4 பவுண்–டரி, 3 சிக்–சர்) அணி–யின் ஸ்கோர் 107 ரன்–க–ளாக உயர்ந்த போது டிரென்ட் பவுல்ட்–டின் பந்து வீச்–சின் கிளீன் போல்டு ஆனார். ஆனா–லும் இன்–னொரு புறம் விசு–வ–ரூ–பம் எடுத்த மிட்–செல் மார்ஷ் 31 பந்–து–களில் அரை–ச–தம் விளாசி மிரட்–டி–னார். 20 ஓவர் உலக கோப்பை இறு–திப்–போட்–டி–யில் அதி–வேக அரை–ச–தம் இது–வா–கும். அவ–ருக்கு மேக்ஸ்–வெல் நன்கு ஒத்–து–ழைப்பு கொடுக்க சிக்–க–லின்றி இலக்கை எட்–டிப்–பி–டித்–த–னர்.

ஆஸ்–தி–ரே–லியா சாம்–பி–யன்

ஆஸ்–தி–ரே–லிய அணி 18.5 ஓவர்–களில் 2 விக்–கெட்–டுக்கு 173 ரன்–கள் குவித்து 8 விக்–கெட் வித்–தி–யா–சத்–தில் வெற்றி பெற்று உலக கோப்–பையை கைப்–பற்–றி–யது. மிட்–செல் மார்ஷ் 77 ரன்–க–ளு–ட–னும் (50 பந்து, 6 பவுண்–டரி, 4 சிக்–சர்), மேக்ஸ்–வெல் 28 ரன்–க–ளு–ட–னும் (18 பந்து, 4 பவுண்–டரி, ஒரு சிக்–சர்) களத்–தில் இருந்–த–னர்.

மிட்–செல் மார்ஷ் ஆட்–ட–நா–ய–கன் விரு–தை–யும், டேவிட் வார்–னர் தொடர்–நா–ய–கன் விரு–தை–யும் (3 அரை–ச–தத்–து–டன் 289 ரன்) பெற்–ற–னர்.

20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்–டத்–தில் ஓர் அணி விரட்–டிப்–பி–டித்த (சேசிங்) அதி–க–பட்ச இலக்கு இது தான். 2010-ம் ஆண்–டில் இறுதி ஆட்–டத்–தில் தோற்–றி–ருந்த ஆஸ்–தி–ரே–லியா முதல்–மு–றை–யாக 20 ஓவர் உலக கோப்–பையை உச்–சி–மு–கர்ந்–துள்–ளது. ஆஸ்–தி–ரே–லி–யா–வுக்கு ரூ.12 கோடி–யும், 2-வது இடம் பிடித்த நியூ–சி–லாந்–துக்கு ரூ.6 கோடி–யும் பரி–சுத்–தொ–கை–யாக வழங்–கப்–பட்–டது.


தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்: இந்தியாவின் சாதனைகள்...!
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த வெற்றியின் மூலம் சில சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன.
2. மும்பை டெஸ்ட்; நியூசிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
3. மும்பை டெஸ்ட்டில் நியூசிலாந்து திணறல்; இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்
3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.
4. மும்பை டெஸ்ட்: காயம் காரணமாக 2 வீரர்கள் பீல்டிங் செய்யவில்லை - பிசிசிஐ தகவல்
காயம் காரணமாக மயங்க் அகர்வால், சுப்மான் கில் ஆகியோர் இன்று பீல்டிங் செய்யமாட்டார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
5. மும்பை டெஸ்ட் - மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி அபார ஆட்டம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 405 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து விளையாடி வருகிறது.