டி20 இறுதிப்போட்டியில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் சாதனை..!


டி20 இறுதிப்போட்டியில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் சாதனை..!
x
தினத்தந்தி 15 Nov 2021 3:34 AM GMT (Updated: 15 Nov 2021 3:34 AM GMT)

டி20 இறுதிப்போட்டியில் கேன் வில்லியம்சன் அதிரடியாக விளையாடி 85 ரன்கள் குவித்தார்.

துபாய்,

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 இறுதி ஆட்டத்தில் 85 ரன்கள் குவித்தார். 

இதன் மூலம் 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் தனிநபர் அதிகபட்ச ரன்களை பதிவு செய்தவரான வெஸ்ட் இண்டீசின் மர்லன் சாமுவேல்சின் சாதனையை (2016-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 85 ரன்) வில்லியம்சன் சமன் செய்தார்.

மேலும், வில்லியம்சன் 69 ரன்கள் எடுத்த போது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 2 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது நியூசிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றார். வில்லியம்சன் இதுவரை 74 ஆட்டங்களில்ஆடி 2,021 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வகையில் முதல் 2 இடங்களில் மார்ட்டின் கப்தில் (3,147 ரன்) பிரன்டன் மெக்கல்லம் (2,140 ரன்) உள்ளனர்.

அவர் நேற்றைய போட்டியில் 21 ரன்களில் இருந்த போது, மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஹேசில்வுட் தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story