தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்: இந்திய ஏ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பகுதுலே நியமனம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 Nov 2021 7:02 AM GMT (Updated: 15 Nov 2021 7:02 AM GMT)

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பகுதுலே நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை,

இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி வருகிற 23-ந் தேதி முதல் டிசம்பர் 9-ந் தேதி வரை தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு ‘ஏ’ அணிக்கு எதிரான 4 நாட்கள் கொண்ட ஆட்டத்தில் விளையாட உள்ளது. 

இந்த சுற்றுப்பயணத்திற்கு  சிதான்ஷு கோடக் தலைமை பயிற்சியாளராகவும், அசாம் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுபதீப் கோஷ் பீல்டிங் பயிற்சியாளராகவும் உள்ளனர். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பகுதுலே நியமிக்கப்பட்டுள்ளார்.

48 வயதான சாய்ராஜ் பகுதுலே விதர்பா, கேரளா, பெங்கால் மற்றும் குஜராத் ஆகிய அணிகளின் பயிற்சியாளராக இருந்துள்ளார். இவர் ஐ.பி.எல்-தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story