மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் : அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது பெர்த் ஸ்கார் சேர்ஸ்


மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் : அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது பெர்த் ஸ்கார் சேர்ஸ்
x
தினத்தந்தி 17 Nov 2021 10:30 AM GMT (Updated: 17 Nov 2021 10:30 AM GMT)

அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெர்த் ஸ்கார்சேர்ஸ் அணி வெற்றி பெற்றது

ஆஸ்திரேலியா 

மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற 47 வது லீக் ஆட்டத்தில்  அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை 12 ரன்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தி பெர்த் ஸ்கார்சேர்ஸ்  அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான மகளிர் பிக்பாஷ் லீக் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்மென் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. 

இன்று காலை நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த  பெர்த் ஸ்கார்சேர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 177 ரன்கள் குவித்தது.அந்த அணியின் தரப்பில் பெத் மோனி 53 பந்துகளில்  78 ரன்கள் குவித்தார்.178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது  அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி.

அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய கேட்டி மாக் 61 பந்துகளில் 84 குவித்தார் .  மேலும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் வால்வார்டட் 28 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் சோபிக்காத நிலையில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 165 ருங்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இதனால் இறுதியில் பெர்த் ஸ்கார்சேர்ஸ்  12 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Next Story