கிரிக்கெட்

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் : ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு + "||" + Ashes Test cricket: Australian squad announced

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் : ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் : ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
ஆஷஸ் தொடரின் முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

பிரிஸ்பேன், 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் அடுத்த மாதம் 8-ந் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. ஆஷஸ் தொடரின் முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் கேப்டனாக தொடருகிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் கணிசமாக ரன்கள் குவித்துள்ள பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா 2 ஆண்டுக்கு பிறகு அழைக்கப்பட்டுள்ளார். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தின் ஹீரோ மிட்செல் மார்சுக்கு அணியில் இடமில்லை.

ஆஸ்திரேலிய அணி வருமாறு:- டிம் பெய்ன் (கேப்டன்), பேட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், மைக்கேல் நேசர், ஜய ரிச்சர்ட்சன், ஸ்டீவன் சுமித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் 20 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!
ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ஆஷஸ் டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி..!தொடரை கைப்பற்றியது
146 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 4-0 என தொடரையும் கைப்பற்றியது.
3. ஆஷஸ் டெஸ்ட் :இங்கிலாந்து அணிக்கு 271 ரன்கள் இலக்கு..!
ஆஸ்திரேலியா 155 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
4. ஆஷஸ் டெஸ்ட் : 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது
5. ஆஷஸ் டெஸ்ட் : ஆஸ்திரேலியா அபார பந்து வீச்சு : 188 ரன்களுக்கு ஆல் -அவுட் ஆனது இங்கிலாந்து ..!
5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஹாபெர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது