சையத் முஷ்டாக் அலி காலிறுதி: கேரளாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழகம்


சையத் முஷ்டாக் அலி காலிறுதி: கேரளாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழகம்
x
தினத்தந்தி 18 Nov 2021 7:40 AM GMT (Updated: 18 Nov 2021 7:40 AM GMT)

தமிழக அணி வீரர்கள் அனைவரும் அணியின் வெற்றிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.

டெல்லி,

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான காலிறுதி சுற்றுக்கு தமிழ்நாடு, ராஜஸ்தான், பெங்கால், குஜராத், ஹைதராபாத், கேரளா, விதர்பா, கர்நாடகம் ஆகிய அணிகள்  தகுதி பெற்றுள்ளன.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதியில் தமிழ்நாடு-கேரள அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழகம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி கேரளத்தின் தொடக்க வீரர் ரோஹன் 51 ரன்கள் எடுத்தார். விஷ்ணு வினோத் 26 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் குவித்து அந்த அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். இறுதியில் கேரள அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. தமிழக அணி தரப்பில் சஞ்சய் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி வீரர்கள் அனைவரும் அணியின் வெற்றிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்தனர். அதிகபட்சமாக சாய் சுதர்சன் 31 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 46 ரன்களை விளாசினார். இறுதியில் ஷாருக் கான் 19 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தார். இதன் மூலம் தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Next Story