கிரிக்கெட்

அஸ்வின் மோசமாக பந்துவீசி நான் பார்த்தது இல்லை - நியூசிலாந்து வீரர் + "||" + Dont remember Ashwin bowling any bad balls throughout my career says Martin Guptill

அஸ்வின் மோசமாக பந்துவீசி நான் பார்த்தது இல்லை - நியூசிலாந்து வீரர்

அஸ்வின் மோசமாக பந்துவீசி நான் பார்த்தது இல்லை - நியூசிலாந்து வீரர்
முதல் 20 ஓவர் போட்டியில் அஸ்வின் 4 ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
ஜெய்ப்பூர் 

எனது வாழ்நாளில் அஸ்வின் மோசமாக பந்துவீசி பார்த்தது இல்லை என நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. 

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான முதலாவது டி20 போட்டி ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம்  நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி  5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்த நிலையில் அஸ்வின் குறித்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்  மார்ட்டின் கப்டில்  கூறியதாவது :

அஸ்வின் ஒரு தந்திரமான பந்து வீச்சாளர். அவர் தனது லைன் மற்றும் லென்த் மீது அபார கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளார்.அவர் மோசமான பந்துகளை வீச மாட்டார். எனது வாழ்நாளில்   எனக்கு அவர் மோசமாக பந்துவீசி பார்த்தது இல்லை .

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் புகழாரம்
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட்கோலி நேற்று அதிரடியாக அறிவித்தார்.
2. ரவிசாஸ்திரியின் கருத்தால் நொறுங்கிப்போனேன்: அஸ்வின் வேதனை
முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உதாசீனப்படுத்திய நிகழ்வை அஸ்வின் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
3. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: ஹர்பஜன் சிங்கை முந்தினார் அஸ்வின்.!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 3-வது இந்திய பந்துவீச்சாளரானார் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின்.
4. அஸ்வினின் அனுபவம் இந்தியாவிற்கு முக்கியம்- பிரட் லீ
அஸ்வினின் அனுபவம் இந்தியாவிற்கு முக்கியமானதாக இருக்கும் என்று பிரட் லீ தெரிவித்துள்ளார்.
5. ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு..
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதாலேயே டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.