கிரிக்கெட்

மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் : மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை வீழ்த்தியது கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி + "||" + Womens Big Bash 20-over Cricket: Hobert Hurricanes beat Melbourne Renegades

மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் : மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை வீழ்த்தியது கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி

மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் : மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை வீழ்த்தியது கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி
மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா ,

மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற 49 வது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை 52 ரன்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தி  கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான மகளிர் பிக்பாஷ் லீக் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்மென் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. 

இன்று காலை நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த கோபர்ட் ஹூரிகேன்ஸ்  அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 161 ரன்கள் குவித்தது.அந்த அணியின் தரப்பில் ருத் ஜான்ஸ்டன்  46 பந்துகளில்  63 ரன்கள் குவித்தார்.162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது  மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி.

மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்  19  ரன்களிலும் மற்றொரு தொடக்க வீராங்கனை ஜோன்ஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் . அடுத்தடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் சோபிக்காத நிலையில் அந்த அணி அனைத்து விக்கெட்களையும்  இழந்து 18 ஓவர் முடிவில்   109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனால் இறுதியில் கோபர்ட் ஹூரிகேன்ஸ்  52 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் 16-17 வயதுடையவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி
ஆஸ்திரேலியாவில் இதுவரை 18 வயதை கடந்த 93 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
2. ஆஸ்திரேலியாவில் 20 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!
ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஆஷஸ் டெஸ்ட் : 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது
4. ஆஷஸ் டெஸ்ட் : ஆஸ்திரேலியா அபார பந்து வீச்சு : 188 ரன்களுக்கு ஆல் -அவுட் ஆனது இங்கிலாந்து ..!
5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஹாபெர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது
5. பெண் ரோபோவை மணக்கும் நபர்! மோதிரம் மாற்றிகொண்டார்
தனிமையை போக்க பெண் ரோபோவை திருமணம் செய்து கொள்ளப்போகும் ஆஸ்திரேலிய நபர்