கிரிக்கெட்

"மனதை புண்படுத்துகிறது"- டி வில்லியர்ஸ் ஓய்வு பற்றி கோலி டுவீட் + "||" + This hurts my heart. I love you': Kohli's message for 'brother' AB de Villiers

"மனதை புண்படுத்துகிறது"- டி வில்லியர்ஸ் ஓய்வு பற்றி கோலி டுவீட்

"மனதை புண்படுத்துகிறது"- டி வில்லியர்ஸ் ஓய்வு பற்றி கோலி டுவீட்
டி வில்லியர்ஸ் ஓய்வு பற்றி விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை, 

தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஏபி டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டார். 

இந்த நிலையில், அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று தன்னுடைய டுவீட்டர் மூலம் தெரிவித்திருந்தார். டி வில்லியர்ஸ்சின் ஓய்வு குறித்து விராட் கோலி தன்னுடைய டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். 

அதில் அவர் கூறியதாவது, "உங்கள் ஓய்வு முடிவு என் மனதை புண்படுத்துகிறது. ஆனால் நீங்கள் எப்போதும் செய்தது போல் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சிறந்த முடிவை எடுத்தீர்கள் என்று எனக்குத் தெரியும். நான் உங்கள் மீது எப்போதும் அன்புடன் இருக்கிறேன்". 

"எங்கள் காலத்தின் சிறந்த வீரர் மற்றும் நான் சந்தித்த மிகவும் உத்வேகம் தரும் நபருக்கு, நீங்கள் ஆர்.சி.பி-க்காக சிறந்த பங்களிப்பை வழங்கியதைப் பற்றி நீங்கள் மிகவும் பெருமைப்படலாம். நம்முடைய பந்தமானது விளையாட்டிற்கு அப்பாற்பட்டது. அது எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும்". இவ்வாறு கோலி தன்னுடைய டுவீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகல் : விராட் கோலிக்கு நோட்டீஸ் : கங்குலி மறுப்பு..!
டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் விராட் கோலி அறிவித்தார்.
2. ஒருநாள் கிரிக்கெட்: சச்சின் சாதனையை முறியடித்த கோலி!
விராட் கோலி, இந்தியாவுக்கு வெளியே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைந்துள்ளார்.
3. டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகல்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!
டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார்.
4. களத்தில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தான் தெரியும்..! வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது - விராட் கோலி
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் வசப்படுத்தியது
5. நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன்: விராட் கோலி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 11 ஆம் தேதி கேப்டவுனில் நடைபெற உள்ளது.