கிரிக்கெட்

இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து + "||" + New Zealand set a target of 154 for India in the 2nd t 20

இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து

இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து
2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து.
ராஞ்சி,

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மார்டின் கப்டிலும், டேரில் மிச்சேலும் களமிறங்கினர். இருவரும் இணைந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய கப்டில் 15 பந்துகளில் 2 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். டேரில் மிச்சேல் நிதானமாக விளையாடி 31 ரன்கள் சேர்த்தார். 

ஆரம்பத்தில் அதிரடி காட்டிய நியூசிலாந்து அணியானது அதிக ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசி கட்டத்தில் நியூசிலாந்தை கட்டுப்படுத்தினர். நடுவரிசையில் க்ளென் பிலிப்ஸ் மட்டும் அதிரடி காட்டி 34 ரன்கள் எடுக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. இறுதியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. 

இந்திய அணி தரப்பில் அறிமுக போட்டியில் விளையாடிய ஹர்சல் படேல் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு - கோலி விலகல்
தென் ஆப்ப்ரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
2. 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்: இந்தியாவை வென்றது பாகிஸ்தான்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின் விறுவிறுப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வென்றது.
3. இந்தியாவின் வெற்றியை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் -தென்னாப்பிரிக்க கேப்டன்
இந்தியாவின் வெற்றியை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தென்னாப்பிரிக்க அணி மேற்கொள்ளும் என அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் கூறியுள்ளார்.
4. விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
38 அணிகள் பங்கேற்கும் விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது.
5. தலைகீழாக நின்று அகலப்பந்தை அறிவித்த நடுவர்..!
கிரிக்கெட் நடுவர் ஒருவர் தலைகீழாக நின்று அகலப்பந்தை அறிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.