கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான டி20 போட்டி: பாகிஸ்தான் அணி வெற்றி + "||" + T20 match against Bangladesh: Pakistan wins

வங்காளதேசத்துக்கு எதிரான டி20 போட்டி: பாகிஸ்தான் அணி வெற்றி

வங்காளதேசத்துக்கு எதிரான டி20 போட்டி: பாகிஸ்தான் அணி வெற்றி
வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
 டாக்கா,

வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான்  வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது , டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு  செய்தது 
  
அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 108 ரன்கள் எடுத்தது .வங்காளதேச அணியில் நஜ்முல் ஹுசைன் சாண்டோ அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார் .

இதனை தொடர்ந்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்   விளையாடிய பாகிஸ்தான் அணி 18.1ஓவர்களில் 2விக்கெட்டுகள் இழந்து 109 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது,பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பகார் ஜமான் 57 ரன்கள் எடுத்தார் . 

இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் 2-0 என்று  தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதியாக பதவியேற்றார் ஆயிஷா மாலிக்!
பாகிஸ்தான் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதியாக பதவியேற்றார் ஆயிஷா மாலிக்.
2. காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பறந்து வந்த பலூன்
ல்லை தாண்டும் அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் பாகிஸ்தான், இதுபோன்று தங்கள் நாட்டு கொடியுடன் இந்திய பகுதிக்குள் பலூன்களை அனுப்புவது வழக்கமாக உள்ளது
3. பாகிஸ்தானில் மோர்டார் குண்டுகள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள முகாம் ஒன்றில் பழைய மோர்டார் ரக குண்டுகள் திடீரென வெடித்து சிதறியது.
4. பாகிஸ்தான்: நபிகள் குறித்து அவதூறு பரப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை
பாகிஸ்தானில் தனது தோழிக்கு நபிகள் பற்றிய அவதூறான கேலிச்சித்திரங்களை அனுப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
5. இம்ரான்கான் கட்சியின் நிதி மோசடி: தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு
தேர்தல் கமிஷன், மனுதாரருக்கு ஆவணங்களை வெளியிட உத்தரவிட்டு இருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.