கிரிக்கெட்

மைதானத்தில் ரோகித் சர்மாவின் கால்களைத் தொட முயன்ற ரசிகர்..! + "||" + Fan trying to touch Rohit Sharma's feet on the field ..!

மைதானத்தில் ரோகித் சர்மாவின் கால்களைத் தொட முயன்ற ரசிகர்..!

மைதானத்தில்  ரோகித் சர்மாவின் கால்களைத் தொட முயன்ற ரசிகர்..!
ராஞ்சியில் நடந்த 2வது டி20 போட்டியில், பாதுகாப்பை மீறிய ரசிகர், ரோகித் சர்மாவின் கால்களைத் தொட முயன்றார்.
ராஞ்சி,

இந்திய அணி நியூசிலாந்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது பாதுகாப்புப்படையினரின் பாதுகாப்பை மீறி திடீரென மைதானத்திற்குள் ஓடி வந்தார்.

ரோகித் சர்மாவை நோக்கி நேரடியாக அவர் ரோகித்தின் கால்களை தொட முயன்றார். இதனை கண்டு சுதாரித்துக்கொண்ட ரோகித், தனது கால்களை ரசிகர் தொடாதவாறு விலகி, இவ்வாறு செய்யவேண்டாம் என்று தெரிவிக்க முயன்றார்.

உடனடியாக பாதுகாப்புப்படையினர் மைதானத்திற்குள் வந்து அவரை வெளியேற்ற முயன்றனர். இதனை கண்ட அந்த ரசிகர் மைதானத்தை விட்டு ஓடிவிட்டார். சில ரசிகர்கள், தனக்கு மிகவும் பிடித்த வீரர்களை மைதானத்திற்குள் சென்று கட்டிப்பிடிப்பதும், கால்களை தொடுவதுமான செயல்களை செய்கின்றனர். கடந்த காலங்களில் டோனி போன்ற நட்சத்திர வீரர்கள் ரசிகர்களின் இதுபோன்ற அன்புத்தொல்லையை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து ரோகித் சர்மா கூறியது என்ன?
விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக நேற்று திடீரென அறிவித்தார்.
2. ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பந்து வீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின் 2-வது இடம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
3. சாதனை படைத்த முகமது ஷமி... ரோகித் சர்மா டுவிட்டர் பதிவு சர்ச்சையானது
டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 200 விக்கெட் வீழ்த்திய 5-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் முகமது ஷமி
4. ஆடை இல்லாத புகைப்படம் கேட்ட ரசிகர் அனுப்பிவைத்த நடிகை...!
ரசிகர் ஒருவர் பூஜா ஹெக்டேவிடம் அவரது ஆடை இல்லாத புகைப்படத்தை வெளியிடுமாறு கூறியுள்ளார்.
5. கணவரிடம் ரூ.50 கோடி பறிப்பு..? விமர்சனம் செய்தவருக்கு பதிலடி கொடுத்த சமந்தா...!
நடிகை சமந்தாவை மோசமாக விமர்சனம் செய்த நபருக்கு அவர் அளித்துள்ள பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.