"பவுலர்களுக்கும் கேப்டன் பதவியை வழங்கலாம்": கம்மின்ஸ்க்கு ஆதரவளித்த ஆண்டர்சன்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Nov 2021 12:30 PM GMT (Updated: 21 Nov 2021 12:30 PM GMT)

பந்து வீச்சாளர்கள் விளையாட்டைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

பிரிஸ்பேன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி பிரிஸ்பேனில் அடுத்த மாதம் 8-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டு வரும் டிம் பெய்ன், பெண் ஊழியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய குற்றச்சாட்டில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் அடுத்த டேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்த நிலையுல், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். 

அவர் கூறியதாவது, "பொதுவாக பந்துவீச்சாளர்கள் கேப்டனாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பந்து வீச்சாளர்கள் விளையாட்டைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள். பேட்ஸ்மேன்கள் தான் ஓர் அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என்று பலர் கருதுகின்றனர். ஆனால் பந்துவீச்சாளர்கள் கேப்டன் பொறுப்பை சிறப்பாக கையாளக்கூடியவர்கள். பேட் கம்மின்ஸ்க்கு கேப்டன் பதவியை கொடுத்தால், அவர் அதில் அற்புதமாக செயல்படுவார். ஏன் கேப்டன் பதவியை பேட் கம்மின்ஸ்க்கு கொடுக்கக்கூடாது என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்".


Next Story