கிரிக்கெட்

3-வது டி20 : நியூசிலாந்துக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா + "||" + India have set a target of 185 for New Zealand in the T20I.

3-வது டி20 : நியூசிலாந்துக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

3-வது டி20 : நியூசிலாந்துக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
டி20 போட்டியில் நியூசிலாந்துக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
கொல்கத்தா,

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர். இந்த ஜோடியானது நியூசிலாந்தின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. இஷான் கிஷன் 29 ரன்களில் வெளியேற, ரோகித் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். 

ரோகித் 31 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூரியகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினாலும், அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.  இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. 

நியூசிலாந்து தரப்பில் கேப்டன் சண்ட்னர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு - கோலி விலகல்
தென் ஆப்ப்ரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
2. 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்: இந்தியாவை வென்றது பாகிஸ்தான்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின் விறுவிறுப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வென்றது.
3. இந்தியாவின் வெற்றியை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் -தென்னாப்பிரிக்க கேப்டன்
இந்தியாவின் வெற்றியை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தென்னாப்பிரிக்க அணி மேற்கொள்ளும் என அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் கூறியுள்ளார்.
4. விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
38 அணிகள் பங்கேற்கும் விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது.
5. தலைகீழாக நின்று அகலப்பந்தை அறிவித்த நடுவர்..!
கிரிக்கெட் நடுவர் ஒருவர் தலைகீழாக நின்று அகலப்பந்தை அறிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.