கிரிக்கெட்

இந்திய அணி தற்போது யதார்த்தமாக இருக்க வேண்டும்: வெற்றிக்குப் பிறகு டிராவிட் பேட்டி..! + "||" + Need to be realistic, not easy for NZ to play series three days after WC final: Rahul Dravid

இந்திய அணி தற்போது யதார்த்தமாக இருக்க வேண்டும்: வெற்றிக்குப் பிறகு டிராவிட் பேட்டி..!

இந்திய அணி தற்போது யதார்த்தமாக இருக்க வேண்டும்: வெற்றிக்குப் பிறகு டிராவிட் பேட்டி..!
நாம் நமது கால்களை தரையில் வைத்து சற்று யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார்.
கொல்கத்தா, 

இன்று நடந்த கடைசி 20 ஒவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதன்படி டி 20 தொடரை 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்று நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி.

போட்டியின் வெற்றிக்கு பின்னர் பேசிய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “இது ஒரு நல்ல தொடர் வெற்றி. தொடரில் அனைவரும் நன்றாக விளையாடினர். நன்றாகத் தொடங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் நாங்களும் மிகவும் யதார்த்தமாக இருக்கிறோம். உண்மையைச் சொல்வதென்றால், நாம் நம் கால்களை தரையில் வைத்துக்கொண்டு சற்று யதார்த்தமாக இருக்க வேண்டும். உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் மூன்று நாட்களுக்குப் பிறகு விளையாடுவதும், ஆறு நாட்களில் மூன்று ஆட்டங்களில் விளையாடுவதும் நியூசிலாந்து அணிக்கு எளிதாக இருக்கவில்லை. 

இந்திய இளம் வீரர்களின் செயல்பாடுகள் அணிக்கு சாதகமாக உள்ளது. இந்தத் தொடரில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும். அடுத்த 10 மாதங்களில் இது ஒரு நீண்ட பயணமாகும், மேலும் எங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் இருக்கும். சில இளைஞர்கள் முன்னேறி வருவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த சில மாதங்களாக அதிக அளவில் கிரிக்கெட் விளையாடாத சில வீரர்களுக்கு நாங்கள் வாய்ப்பளித்துள்ளோம், மேலும் சில அனுபவமிக்க வீரர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டனர். நாங்கள் எங்களிடம் உள்ள சில திறன்களைப் பார்த்தோம், நாங்கள் முன்னேறும்போது அந்த திறன்களையும் வளர்த்துக்கொள்வோம்” என்று டிராவிட் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய அணியின் கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தால்..? பும்ரா பதில்
இந்திய அணியின் கேப்டன் பதவி குறித்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
2. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 -வது டெஸ்ட் : பயிற்சியை தொடங்கிய இந்திய அணி..!
3 வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்க இருக்கிறது.
3. புரோ கபடி:தமிழ் தலைவாஸ் முதல் வெற்றி
நேற்றைய போட்டியில் புனேரி பால்டனை வீழ்த்தியது.
4. ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி
இன்று நடந்த 2-வது அரைஇறுதி போட்டியில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதின.
5. இந்திய அணியில் கேப்டன்ஷிப் பிரிப்புக்கு ரவிசாஸ்திரி ஆதரவு
இந்திய அணியில் கேப்டன்ஷிப் பிரிப்புக்கு ரவிசாஸ்திரி ஆதரவு தெரிவித்துள்ளார்.