இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இலங்கை 386 ரன்கள் எடுத்தது


இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இலங்கை 386 ரன்கள் எடுத்தது
x
தினத்தந்தி 22 Nov 2021 12:40 PM GMT (Updated: 22 Nov 2021 12:40 PM GMT)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 386 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கல்லே,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பதுன் நிஷாங்காவும், கேப்டன் கருணரத்னேவும் களமிறங்கினர். நிஷாங்கா சிறப்பாக விளைவாடி அரைசதம் எடுத்தார். அவர் 56 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் கருணரத்னே பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். போட்டியின் முதல்நாள் முடிவில் இலங்கை அணி 88 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. கேப்டன் கருணரத்னேவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சில்வா 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி  வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 386 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளார் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். வாரிகேன் 3 விக்கெட்டுகளையும், கப்ரியேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இலங்கை அணி தரப்பில் கேப்டன் கருணரத்னே சதமடித்து அசத்தினார். அவர் 300 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டரிகள் விளாசி 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஸ்டன் சேஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பதும் நிசங்கா, தனஞ்செயா டி சில்வா ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். சண்டிமால் 45 ரன்கள் எடுத்தார். 

Next Story