இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: 3-ம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு!


இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: 3-ம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு!
x
தினத்தந்தி 23 Nov 2021 2:46 PM GMT (Updated: 23 Nov 2021 2:46 PM GMT)

இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்படைந்தது.

கல்லே,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே அபாரமாக விளையாடி சதமடிக்க, அந்த அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 386 ரன்கள் குவித்தது.

பின்னர் தனது இன்னிங்ஸ்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கிரேக் பிராட்வெயிட் 41 ரன்களும், பிளாக்வுட் 20 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். இரண்டாம் நாள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்தது.

பின்னர் மூன்றாம் நாளான இன்று தனது இன்னிங்ஸ்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது, கைல் மயர்ஸ் 45 ரன்கள், ஜேசன் ஹோல்டர் 36 ரன்கள், கார்ன்வால் 39 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை சிறிது உயர்த்தினர். ஆனால் ஆட்டத்தின் பாதியில் மழை தொடர்ந்து பெய்ததால், இன்றைய நாள் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நாளை நான்காம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 

அடுத்த இரண்டு நாட்களும் ஆட்டத்தின்போது மழையின் குறுக்கீடு இருக்கும் என்பதால், இந்த போட்டியானது டிராவை நோக்கிச்செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story