கிரிக்கெட்

டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் ஷ்ரேயாஸ் அய்யர் : உறுதிப்படுத்திய ரகானே + "||" + Shreyas Iyer makes Test debut: Confirmed Rahane

டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் ஷ்ரேயாஸ் அய்யர் : உறுதிப்படுத்திய ரகானே

டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் ஷ்ரேயாஸ் அய்யர் :  உறுதிப்படுத்திய ரகானே
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷ்ரேயாஸ் அய்யர் விளையாடுவார் என இந்திய அணி கேப்டன் ரகானே உறுதிப்படுத்தியுள்ளார்.
கான்பூர்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3  20ஓவர் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் 20ஓவர் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

இந்திய அணியில் விராட் கோலிக்கு முதல் டெஸ்ட் போட்டியில் ஒய்வு அளிக்கப்பட்டிருக்கிறது .இதனால் முதல் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக ரஹானே செயல்படுவார். இந்திய வீரர்கள் ரோகித்  சர்மா ,பும்ரா,ரிஷாப் பண்ட, முகமது  ஷமி,ஆகியோருக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது .லோகேஷ் ராகுல் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறிவிட்டார்.

இந்நிலையில்  இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ஷ்ரேயாஸ் அய்யர் நாளை ஆடும் லெவன்  அணியில் இடம் பெறுவார் என்று கேப்டன் ரகானே உறுதிப்படுத்தியுள்ளார்  .

இதனால் ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய அணிக்காக  டெஸ்ட் போட்டியில்  நாளை தனது அறிமுக போட்டியில் விளையாட உள்ளார்.