கிரிக்கெட்

மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் பிளே ஆப் சுற்று : பிரிஸ்மென் ஹீட் அணியை வீழ்த்தியது அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி + "||" + Women's Big Bash 20 Over Cricket Playoff Round: Adelaide Strikers beat brismane Heat

மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் பிளே ஆப் சுற்று : பிரிஸ்மென் ஹீட் அணியை வீழ்த்தியது அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி

மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்  பிளே ஆப் சுற்று : பிரிஸ்மென் ஹீட் அணியை வீழ்த்தியது அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி
அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 16.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா ,

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான மகளிர் பிக்பாஷ் லீக் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்மென் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரின் லீக் சுற்றுகள் கடந்த வாரம் முடிவடைந்தது. புள்ளிபட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருந்த பெர்த் ஸ்கார்சேர்ஸ் , மெல்போர்ன் ரெனேகட்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் , பிரிஸ்மென் ஹீட் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

பட்டியலில் முதல் இடத்தில் இருந்த  பெர்த் ஸ்கார்சேர்ஸ் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில் 3-வது மற்றும் 4-வது இடத்தில் இருந்த அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும்  பிரிஸ்மென் ஹீட் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.

பகல் 1.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட் செய்த  பிரிஸ்மென் ஹீட்  அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 114 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தரப்பில் ஹான்காக்  26 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார்.115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி.

அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய  கேட்டி மாக் 42 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இறுதியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 16.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

நாளை நடைபெறும் போட்டியில்  அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி , மெல்போர்ன் ரெனேகட்ஸ்  அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும்  அணி வரும் 27 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில்  பெர்த் ஸ்கார்சேர்ஸ்  அணியுடன் மோதவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் : அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது பெர்த் ஸ்கார் சேர்ஸ்
அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெர்த் ஸ்கார்சேர்ஸ் அணி வெற்றி பெற்றது
2. மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் : சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்திய அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்
அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய நட்சத்திர வீராங்கனை கேட்டி மாக் 55 பந்துகளில் 67 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.