கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தேநீர் இடைவெளி வரை இந்திய அணி 154-4 + "||" + The Indian team is stumbling after losing 4 wickets in the Test match against New Zealand.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தேநீர் இடைவெளி வரை இந்திய அணி 154-4

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தேநீர் இடைவெளி வரை இந்திய அணி 154-4
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாடி வருகிறது.
கான்பூர்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 0-3 என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றிபெற்றது.


இந்நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.

மயங்க் அகர்வால் 13 ரன்களில் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் அடுத்து களமிறங்கிய புஜாரா சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. 

கில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்த சிறிது நேரத்தில் புஜாராவும் 26 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் ரஹானே 6 பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுக்க, ஜேமிசன் பந்துவீச்சில் போல்டானார். இதனால் இந்திய அணி 50 ஓவர்களில் 145 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்தது. தற்போது ஸ்ரேயஸ் ஐயரும், ஜடேஜாவும் அணியை சரிவில் இருந்து மீட்க போராடி வருகின்றனர். தேநீர் இடைவெளி வரை இந்திய அணி நான்கு விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மும்பை டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 221/4
சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 196 பந்தில் தனது 4 வது டெஸ்ட் சதத்தை அடித்தார்.
2. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது
கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி 'டிரா'வில் முடிந்தது.
3. எங்கள் வீரர்கள் ஆடிய விதம் நம்பிக்கையை அளிக்கிறது- கேன் வில்லியம்சன்
கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்தோம்.
4. கான்பூர் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸ்சில் நியூசிலாந்து அணி 296 ரன்னுக்கு ஆல் அவுட்
தன்னுடைய முதல் இன்னிங்ஸ்சில் நியூசிலாந்து அணி 296 ரன்கள் எடுத்துள்ளது.
5. கான்பூர் டெஸ்ட் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் சேர்ப்பு
நியூசிலாந்து அணியில் வில் யங் 75 ரன்களும்,டாம் லாதம் 50 ரன்களும் எடுத்துள்ளனர்