கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி + "||" + Sri Lanka won the Test match against the West Indies.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
கல்லே,

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 386 ரன்கள் குவித்தது. 

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4-வது நாளான நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணி எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து 230 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. 


அடுத்து 156 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 191 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. கேப்டன் கருணாரத்னே (83 ரன்), மேத்யூஸ் (69 ரன்) அரைசதம் அடித்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 348 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

கடின இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி சுழல் தாக்குதலில் சிக்கி 18 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை தாரைவார்த்து தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டது.  நேற்றைய ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்து தள்ளாடுகிறது. கிருமா பொன்னெர் (18 ரன்), ஜோஷூவா டா சில்வா (15 ரன்) களத்தில் உள்ளனர். 

பின்னர் இன்று நடைபெற்ற கடைசி நாளில் அந்த அணியில் கிருமா பொன்னெர் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் போராடிய நிலையில், விக்கெட் கீப்பர் ஜோசுவா ட சில்வா 54 ரன்கள் எடுக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் வெஸ்ட் அணி இண்டீஸ் 160 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதனால் இலங்கை அணி 187 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியின் கேப்டன் கரணரத்னே ஆட்டநாயகன் விருதை பெற்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொழும்பு துறைமுக விரிவு ஒப்பந்தம் : சீன நிறுவனத்துக்கு வழங்கியது இலங்கை அரசு
இலங்கையின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதில் சீனா தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது
2. இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: 3-ம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு!
இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்படைந்தது.
3. இலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து- 7 பேர் பலி
பள்ளி மாணவர்கள் உள்பட 23 பேருடன் சென்று கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
4. இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி திணறி வருகிறது.
5. இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இலங்கை 386 ரன்கள் எடுத்தது
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 386 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.