கிரிக்கெட்

டெஸ்ட் அணியில் இடம்: ஸ்ரேயஸ் ஐயருக்கு ரிக்கி பாண்டிங் வாழ்த்து + "||" + 'Only the Beginning For You Mate': Ricky Ponting Congratulates Shreyas Iyer For His Test Debut Against New Zealand

டெஸ்ட் அணியில் இடம்: ஸ்ரேயஸ் ஐயருக்கு ரிக்கி பாண்டிங் வாழ்த்து

டெஸ்ட் அணியில் இடம்: ஸ்ரேயஸ் ஐயருக்கு ரிக்கி பாண்டிங் வாழ்த்து
டெஸ்ட் அணியில் இடம் பிடித்த ஸ்ரேயஸ் ஐயருக்கு ரிக்கி பாண்டிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன், 

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

 இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கான்பூரில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரராக ஸ்ரேயஸ் ஐயர் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் டெஸ்ட் அணியில் இடம் பிடித்த ஐயருக்கு ஆஸ்திரேலிய அணியில் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டுவீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 அவர் கூறுகையில், "கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் செய்த கடின உழைப்புக்கு தற்போது இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. இதற்கு நீங்கள் தகுதியானவர். இது ஆரம்பம் மட்டுமே. உன்னை நினைத்து பெருமை கொள்கிறேன்". என்று தன்னுடைய பதிவில் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

 ரிக்கி பாண்டிங், ஸ்ரேயஸ் ஐயர் விளையாடும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமைப்பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.