கிரிக்கெட்

பாகிஸ்தான்-வங்காளதேசம் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்...! + "||" + The first Test cricket match between Pakistan and Bangladesh starts today ...!

பாகிஸ்தான்-வங்காளதேசம் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்...!

பாகிஸ்தான்-வங்காளதேசம் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்...!
பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடங்குகிறது.
சான்டோகிராம், 

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந்த நிலையில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. 20 ஓவர் தொடரை முழுமையாக கைப்பற்றி இருக்கும் பாகிஸ்தான் அணி, அதேபோல் டெஸ்ட் தொடரிலும் தனது ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் இருக்கிறது. 

அதேநேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இதுவரை (10 தோல்வி, ஒரு டிரா) வெற்றி கண்டிராத வங்காளதேச அணி முதல் வெற்றியை சுவைக்க தீவிரம் காட்டும். எனவே இந்த போட்டி தொடர் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தசைப்பிடிப்பு பிரச்சினையில் இருந்து இன்னும் மீளாத ‘ஆல்-ரவுண்டர்’ ஷகிப் அல்-ஹசன் டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகி இருப்பது வங்காளதேச அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.