கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டனாகிறார் பேட் கம்மின்ஸ்..! + "||" + Pat Cummins Announced as Australia Test Captain, Steve Smith Named His Deputy

ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டனாகிறார் பேட் கம்மின்ஸ்..!

ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டனாகிறார் பேட் கம்மின்ஸ்..!
ஆஸ்திரேலியாவின் 47-வது டெஸ்ட் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி பிரிஸ்பேனில் அடுத்த மாதம் 8-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டு வரும் டிம் பெய்ன், பெண் ஊழியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய குற்றச்சாட்டில் தனது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பின் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்த போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணியில் 47-வது டெஸ்ட் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதிசெய்துள்ளது. இதன் மூலம் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முழுநேர கேப்டனாக இருக்கும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுகிறார். ஸ்டீவ் ஸ்மித் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பேய் நாயுடன் தனது செல்ல நாய் விளையாடியதாக ஒருவர் புலம்பல்...! வீடியோ
தனது செல்ல நாய் பேயாக வந்த ஒரு நாயுடன் விளையாடியதாக ஒருவர் கூறி சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உள்ளார். ஆனால் அதனை பலர் புரளி என மறுத்து உள்ளனர்
2. ரூ.11.25 லட்சத்திற்கு விலை போன ஆடு! சுவாரசியமான சம்பவம்
முன்னதாக 12 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் மதிப்புக்கு ஒரு ஆடு விலை போனதே சாதனையாக இருந்தது.இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.
3. "பவுலர்களுக்கும் கேப்டன் பதவியை வழங்கலாம்": கம்மின்ஸ்க்கு ஆதரவளித்த ஆண்டர்சன்
பந்து வீச்சாளர்கள் விளையாட்டைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
4. மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் : மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை வீழ்த்தியது கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி
மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி வெற்றி பெற்றது.
5. ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் : ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
ஆஷஸ் தொடரின் முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.