கிரிக்கெட்

அறிமுக டெஸ்ட்டில் சதம்: அசத்தினார் ஷ்ரேயஸ் அய்யர்..! + "||" + IND vs NZ, 1st Test, Day 2: Shreyas Iyer Joins Elite Club With Maiden Test Century on Debut

அறிமுக டெஸ்ட்டில் சதம்: அசத்தினார் ஷ்ரேயஸ் அய்யர்..!

அறிமுக டெஸ்ட்டில் சதம்: அசத்தினார் ஷ்ரேயஸ் அய்யர்..!
முதல் டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
கான்பூர்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில்  அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.

மயங்க் அகர்வால் 13 ரன்களில் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் அடுத்து களமிறங்கிய புஜாரா சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. 

கில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்த சிறிது நேரத்தில் புஜாராவும் 26 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் ரஹானே 35 ரன்கள் எடுக்க, ஜேமிசன் பந்துவீச்சில் போல்டானார். அடுத்து களமிறங்கிய  ஷ்ரயாஸ்  அய்யரும், ஜடேஜாவும் அணியை சரிவில் இருந்து  மீட்டு சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர் .சிறப்பாக விளையாடிய ஸ்ரயாஸ் அய்யர் ,ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்தனர் .

இந்நிலையில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி  84 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள்  எடுத்துள்ளது. நியூசிலாந்து  சார்பில்  அதிகபட்சமாக கைல் ஜேமிசன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்திய அணியில் ஷ்ரேயஸ் அய்யர் 75  ரன்களும் ,ஜடேஜா 50 ரன்களும்  எடுத்து களத்தில்  இருந்தனர்

இன்று காலை இறங்கியவுடனேயே ஷ்ரேயஸ் அய்யர்  தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 159 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். 

இந்த வரிசையில் முதன்முறையாக லாலா அமர்நாத், 1933-ல் மும்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 118 ரன்களை எடுத்தபோது, ​​அறிமுக போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

மொகாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஷிகர் தவான் 187 ரன் எடுத்ததே டெஸ்ட் போட்டியில் அறிமுக இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. 

கடைசியாக ஷிகர் தவான், ரோகித் சர்மா மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் இந்தியாவில் தனது அறிமுக போட்டியில் சதமடித்தவர்கள் ஆவர். 

தொடர்புடைய செய்திகள்

1. 50 நாட்களுக்கு பிறகு சென்னையில் பெட்ரோல் விலை மீண்டும் சதம் அடித்தது
சென்னையில் 50 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து மீண்டும் சதம் அடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
2. ஆஸ்திரேலியா டெஸ்டில் சதம் விளாசி ஸ்மிரிதி மந்தனா சாதனை
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிரிதி மந்தனா படைத்துள்ளார்.