கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: உணவு இடைவேளை வரை இந்திய அணி 339-8 + "||" + The Indian team has scored 339 runs till the lunch break of the second day of the Test series against New Zealand.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: உணவு இடைவேளை வரை இந்திய அணி 339-8

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: உணவு இடைவேளை வரை இந்திய அணி 339-8
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 339 ரன்கள் எடுத்துள்ளது.
கான்பூர்,

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்திய அணியில் ஷ்ரயாஸ் அய்யர் 75  ரன்களும் ,ஜடேஜா 50 ரன்களுடனும் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஜடேஜா இன்றைய நாள் ரன் ஏதும் எடுக்காமல் சவுதி வேகத்தில் பெவிலியன் திரும்பினார். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் அய்யர் அறிமுக டெஸ்ட்டிலேயே தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 105 ரன்கள் எடுத்த நிலையில் சவுதி பந்தில் வெளியேறினார்.

அடுத்து வந்த விருத்திமான் சாகாவும், அக்சர் படேலும் வந்த வேகத்தில் வெளியேறினர். அஸ்வின் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக உமேஷ் யாதவ் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் 5 பவுண்டரியுடன் 38 ரன்களுக், உமேஷ் யாதவ் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா மேலும் ஒரு உலக கோப்பை வெல்வதை பார்க்க விரும்புகிறேன் - சச்சின் பேட்டி
இந்தியா மேலும் ஒரு உலக கோப்பை வெல்வதை பார்க்க விரும்புவதாக சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
2. இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
3. கொரோனா தடுப்பு வளையம் பாதுகாப்பாக இல்லை- ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மீது இந்திய பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பே காரணம் என்று பயிற்சியாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
4. பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி தென்கொரியாவிடம் தோல்வி
பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி தென்கொரியாவிடம் தோல்வி அடைந்தது.
5. மிரட்டும் கொரோனா; இந்தியாவில் 4 கோடியை கடந்த பாதிப்பு!!
அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை உள்ளது.