கிரிக்கெட்

கான்பூர் டெஸ்ட்: இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல் அவுட் + "||" + India scored 345 in their first innings in the Kanpur Test.

கான்பூர் டெஸ்ட்: இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல் அவுட்

கான்பூர் டெஸ்ட்: இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல் அவுட்
கான்பூர் டெஸ்ட்டில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 345 ரன்கள் குவித்துள்ளது.
கான்பூர்,

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.

மயங்க் அகர்வால் 13 ரன்களில் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் அடுத்து களமிறங்கிய புஜாரா சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. 

கில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்த சிறிது நேரத்தில் புஜாராவும் 26 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் ரகானே 35 ரன்கள் எடுக்க, ஜேமிசன் பந்துவீச்சில் போல்டானார். அடுத்து களமிறங்கிய  ஷ்ரயாஸ்  அய்யரும், ஜடேஜாவும் அணியை சரிவில் இருந்து  மீட்டு சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர் .சிறப்பாக விளையாடிய ,ஜடேஜா அரைசதம் அடித்தார் .

சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் அய்யர் தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அவர் 171 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டரி, 2 சிக்சருடன் 105 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அஸ்வின் 38  ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 111.1 ஓவர்களில் 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. உமேஷ் யாதவ் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் தன்னுடைய முதல் இன்னிங்ஸ்சில் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கொரோனா தடுப்பு வளையம் பாதுகாப்பாக இல்லை- ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மீது இந்திய பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பே காரணம் என்று பயிற்சியாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
3. பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி தென்கொரியாவிடம் தோல்வி
பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி தென்கொரியாவிடம் தோல்வி அடைந்தது.
4. மிரட்டும் கொரோனா; இந்தியாவில் 4 கோடியை கடந்த பாதிப்பு!!
அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை உள்ளது.
5. பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கு இந்தியா தகுதி
பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றது.